ஆந்திரத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 1,491 பேருக்கு கரோனா தொற்று உறுதி!!

ஆந்திரத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 1,491 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,கல்வி நிறுவனங்களில் உள்ள 5,12,890 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சோதனை செய்யப்பட்டதில் 1,491 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் நேர்மறை விகிதம் 0.3 சதவீதம் மட்டுமே என தெரிவித்துள்ளனர். கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது மாநில நிலைகளுக்கேற்ப தளர்வுகளுடன் பொதுமுடக்கம் செயல்படுத்தப்பட்டு வருவதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் படிப்படியாகத் திறக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் நவம்பர் 2ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x