இலங்கையில் முகக் கவசம் கட்டாயம்!! அணியாவிட்டால் ஆறு மாதம் சிறை அல்லது பத்தாயிரம் அபராதம்

இலங்கையில் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு முகக் கவசத்தை கட்டாயமாக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள், “ அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுவெளியில் முகக் கவசம் அணிய வேண்டும் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இதனை பின்பற்றாதவர்களுக்கு ஆறு மாதம் சிறை அல்லது பத்தாயிரம் அபராதம் அறிவிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகரித்ததைத் தொடர்ந்து அங்கு பள்ளிகள், முக்கிய அலுவலகங்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான அறிகுறிகளை மறைப்பவர்களுக்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.

இந்தநிலையில் கோத்தபய ராஜபக்ச தலைமையிலான அரசு கோவிட் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையில் இறங்கியதன் காரணமாக அங்கு கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.

இலங்கையில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனாதொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x