மற்றொரு கொரோனாவை தயாரிக்க பாகிஸ்தானுடன் சீனா கூட்டணி?

இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பாகிஸ்தானை கைக்குள் போட்டுக்கொண்டு அங்கு பயோ வெப்பன் (Bio Weapon) எனப்படும் உயிரி ஆயுதங்களை தயாரிக்கும் வேலையில் சீனா இறங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புலனாய்வு பத்திரிகையாளர், அந்தோணி கிளான், ‘கிளாக்சன்’ இணையதளத்தில் இது பற்றி எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: ‘வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி’ ஆய்வகம் பாகிஸ்தான் ராணுவத்தின் பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்புடன், ‘டெஸ்டோ’ எனப்படும் ரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இதன்படி, ஆபத்தான உயிரி ஆயுத திறன்களை விரிவுபடுத்துவதற்கான ஆராய்ச்சியில், இருநாடுகளும் இறங்கியுள்ளன.  மிகவும் ஆபத்தான, ‘ஆந்தராக்ஸ்’ தொடர்பான ஆராய்ச்சி திட்டங்களும் இதில் அடங்கும். இதற்காக, வூஹான் ஆய்வகம், பாகிஸ்தானுக்கு உதிரிபாகங்களையும், பயிற்சியையும் வழங்கியுள்ளது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை துாண்டி விடுவதற்காக, இந்த திட்டத்தில், சீனா அதிக ஆர்வம் காட்டுகிறது

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x