கொரோனாவுக்கு மருந்து? டாக்டரின் பரபரப்பான ஆடியோ!
கடந்த மார்ச் மாதம் 13இல், டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த தப்லீக் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இவர்கள் தமிழகம் திரும்பிய நிலையில், இவர்கள் பலருக்கும் கொரோனா பாசிட்டிவ் இருப்பதாக பரிசோதனையில் தெரியவந்தது. தமிழகத்தில் கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை அதிகரித்ததற்கு, இந்த மாநாட்டில் கலந்துகொண்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர்களே காரணம் என்று மீடியாக்களில் கூறப்பட்டு வந்தன.
இந்நிலையில், புதிய திருப்பமாக, தமிழக தப்லீக் உறுப்பினர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என்று காட்டினாலும், அந்நபர்கள் உடம்பில் கொரோனா வைரஸ் வேலை செய்யாதது ஏன் என்று விஞ்ஞானிகள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழகத்தை சேர்ந்த முன்னணி அரசு மருத்துவர் கார்த்திகேயன் என்பவர் பேசும் ஆடியோ வேகமாக பரவி வருகிறது.
அதில் அவர் கூறுகையில், “மாநாட்டில் கலந்துகொண்ட தப்லீக் உறுப்பினர்கள் 90 சதவீதம் பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று காட்டுகிறது. ஆனால், 21 நாட்களாகியும் அவர்களுக்கு கொரோனாவுக்கான எந்த அறிகுறியும் ஏற்படவில்லை. அவர்களிடமிருந்து பிறருக்கும் கொரோனா பரவவில்லை. இது எங்களுக்கு புதிராக உள்ளது. இவர்கள் உடலில், கிருமிக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பதற்கே இதற்கு காரணமாக இருக்க வேண்டும். அவர்களை, ஆய்வுக்கு உட்படுத்த உள்ளோம். அவர்களுக்கு ரத்த மாதிரிகளை எடுத்து, அதிலிருந்து நோய் தடுப்பு மருந்தை கண்டறிவதற்கான பணியை தொடங்குவோம். மேலும், தப்லீக் உறுப்பினர்களின் உணவு முறை குறித்தும் கேட்டு அறியஉள்ளோம். கொரேனாவுக்கான மருந்து இவர்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டால், உலகமே பயனடையும்.” இவ்வாறு அரசு மருத்துவர், டாக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
கொரோனா பரவலுக்கு காரணமாக பார்க்கப்பட்டவர்கள், மருந்து கண்டுபிடிக்கவும் உதவியாக மாறியுள்ளார்கள் என்ற விஷயம் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் இந்த ஆச்சர்யத்தை மையமாக ஆக்கி செய்தி வெளியிட்டுள்ளது.