உலகம்டிரெண்டிங்
Trending

கொரோனாவிலிருந்து தப்பித்த தாத்தாவுக்கு, 8 கோடி ரூபாய் பில்….

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வசிப்பவர் மைக்கேல் புளோர் (வயது 70) என்ற முதியவர். இவருக்கு கடந்த மார்ச்சில் கொரோனா இருப்பதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து, வடமேற்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த மார்ச் 4ந்தேதி கொரோனா பாதிப்பிற்காக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். தொடர்ந்து 62 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையின் இடைப்பட்ட காலகட்டத்தில், அவர் உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என்று மருத்துவர்களும் கைவிரித்து விட்டனர்.

ஆனால், அதிர்ஷடவசமாக அவர் உயிர் பிழைத்து விட்டார். பின்னர் சிகிச்சை முடிந்த முதியவர் புளோர், கடந்த மே 5ந்தேதி வீடு திரும்பினார். அவருக்கு அளித்த சிகிச்சை பலன் தந்த மகிழ்ச்சியில் செவிலியர்கள் உற்சாகமுடன் வழியனுப்பினர். ஆனால், புளோருக்கு வந்த மருத்துவ பில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, இந்திய மதிப்பில் 8.3 கோடி ரூபாய் மருத்துவ கட்டண செலவு என்று எழுதப்பட்டு இருந்தது. தீவிர சிகிச்சை அறைக்கு நாள் ஒன்றுக்கான செலவு, வென்டிலேட்டர் கட்டணம், உயிருக்கு அச்சுறுத்தலான 2 நாட்களுக்கு அளித்த உயர் சிகிச்சை என சேர்த்து இந்த கட்டண தொகை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

எனினும், முதியோருக்கான அரசு காப்பீடு திட்டம் அந்த தாத்தாவுக்கு கைகொடுத்தது. அவர், தனது பணத்தினை செலவு செய்ய வேண்டிய தேவை இல்லாமல் போனது. ஆனால் அவர் கூறும்பொழுது, ஒரு நாட்டில், சுகாதார நலம் என்பது உலகில் அதிக விலையுயர்ந்த ஒன்றாக இருக்கும்பொழுது, அதனை சமூகமயமாக்குவதில் சர்ச்சை தொடர்வது, வரி செலுத்தும் மக்களுக்கு அதிக கட்டண சுமையை ஏற்படுத்தும். பெருமளவிலான மக்கள் பாதிக்கப்படுவர். இதனால் எனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது என கூறியுள்ளார்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் ரூ.75 ஆயிரத்து 957 கோடி அளவுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யும் பெரிய அளவிலான திட்டம் ஒன்றை செயல்படுத்த அமெரிக்க நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது.

Related Articles

Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
அன்புச்செல்வன்
அன்புச்செல்வன்
3 years ago

இந்தியாவில் மருத்துவம் இலவசமாக வழங்கப்பட வேண்டும்,

habeeb
habeeb
1 year ago

ok da

Back to top button
2
0
Would love your thoughts, please comment.x
()
x