பெங்களூரு இடுகாடுகளில் தொங்கும் ஹவுஸ்ஃபுல் பலகைகள்

பெங்களூரு: ஆக்சிஜன் பற்றாக்குறையால் சாமராஜ்நகா் மாவட்ட அரசு மருத்துவமனையில் 24 போ் பரிதாபமாக உயிரிழந்தனா். இந்த சம்பவம் கா்நாடகத்தில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் கிடைக்காத அவல நிலையும் இன்னமும் நீடித்துக் கொண்டேயிருக்கிறது. படுக்கை வசதி கிடைத்தாலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை பயமுறுத்துகிறது.

கர்நாடகத்தில் உள்ள மூன்று முக்கிய மருத்துவமனைகளில் போதிக ஆக்ஸிஜன் இல்லாத நிலை நேற்று ஏற்பட்டது. இதனால், நோயாளிகளை மருத்துவமனைகள் வெளியேற்றும் சூழ்நிலை உருவானது.  உடனடியாக அத்தனை நோயாளிகளுக்கும் மருத்துவமனைகளில் படுக்கை வதிக்கு எங்குச் செல்வது என்று தெரியாமல் நோயாளிகளின் உறவினர்கள் தவித்துப் போயினர்.

ஒரு பக்கம் மருத்துவமனைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜனை வழங்க மாவட்ட நிர்வாகங்கள் எடுத்த நடவடிக்கையும் திருப்தி அளிக்கவில்லை.

மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் அதே வேளையில், சுடுகாடுகளும் இடுகாடுகளும் தகனம் செய்யக் காத்திருக்கும் உடல்களால் நிரம்பியுள்ளன. சில இடுகாடுகளில் புதைக்க போதிய இடமில்லாமல், ஹவுஸ்புல் என்ற பலகை அதன் நுழைவு வாயில்களில் தொங்கவிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

பெரும்பாலும் திரையரங்குகளில்தான் ஹவுஸ்ஃபுல் பலகை வைப்பது வழக்கம். ஆனால், கரோனா பெருந்தொற்றால் இடுகாடுகளுக்கும், சுடுகாடுகளுக்கும் ஹவுஸ்ஃபுல் பலகை வைக்கும் நிலை ஏற்பட்டுவிட்டதே என்று மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x