
முகம்மது நபி பற்றிய கார்ட்டூன் வெளியிடப்போவதாக, மாரிதாஸ், மற்றும் அவரது ஆதரவாளர் கார்ட்டூனிஸ்ட் வர்மா அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதற்கு இஸ்லாமிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
கொரோனாவுக்கு எதிராக நாடே போராடிக்கொண்டிருக்கிறது என்று மத்திய, மாநில அரசு சொல்லிக்கொண்டாலும், சமூக வலைத்தளங்களில் வேறு திசையில் விவாதப்பொருள் சென்று கொண்டிருக்கிது. தமிழ்நாடு யங் திங்கர்ஸ் ஃபாரம் (Tamil Nadu Young Thinkers Forum) பணியாற்றிக்கொண்டிருப்பவர் திருப்புவனத்தை சேர்ந்த மாரிதாஸ். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆதரவு பெற்ற இந்த அமைப்பின் முக்கிய முகங்களுள் ஒருவராக உள்ள மாரிதாஸ், யூடியூப்பில் சர்ச்சை பேச்சுகளுக்கு பெயர்பெற்றவர்.
‘ஏன் தி.மு.க. அழிய வேண்டும்’,‘தி.மு.க. பாகிஸ்தான் தொடர்பு’, ‘தீவிரவாதிகள்+கொரோனா ’ என்று பல சர்ச்சை தலைப்புகளில் வீடியோ போட்டு வருகிறார். வெறும் அரசியல் ரீதியான விமர்சனங்களாக அல்லாமல், மதப்பிரிவினையை தூண்டி வருவதாக இவர் மீது புகார்கள் அதிகரித்து வருகின்றன.
அந்த வரிசையில், ‘தி.மு.க.+ தி.க.+ செய்தி நிறுவனங்கள், நடுநிலை இந்துக்கள் இளிச்சவாயன்களா?’என்று சமீபத்தில் இவர் போட்ட வீடியோ பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், மத்திய அரசின் சிறந்த பத்திரிகையாளர் விருது வாங்கிய பிரபல நியூஸ்18 சேனல் குணசேகரன், நியூஸ் 7 நெறியாளர் நெல்சன், புதியதலைமுறை டி.வி. நெறியாளர் கார்த்திகைசெல்வன், செந்தில் போன்றோரை தி.மு.க. கைக்கூலிகள் என்று கடுமையாக விமர்சித்தார்.

அதோடு, மதப்பிரிவினையை ஏற்படுத்தும் வகையில், இவர்களுக்கு பின்புலமாக, இஸ்லாமியர்களே செயல்படுவதாகவும் கூறினார். குறிப்பாக, ‘கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பை முஸ்லிம்கள் பத்திரிகையாளர்கள் சிலர் பின்புலமாக இருந்து நடத்தி வருகின்றனர்; அவர்கள் இந்துக்களுக்கு எதிரான கருத்துகளை பரப்புகின்றனர்’ என்று கூறியிருந்தார். மேலும், “முகம்மது நபியை பற்றி ஒரு கார்ட்டூன் வெளியிட யாருக்காவது தில் இருக்கிறதா” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இவர் கூறிய பிரிவினை கருத்துகள் தற்போது வேலை செய்ய ஆரம்பித்துள்ளது. மாரிதாஸ் சவாலுக்கு ஆதரவு தரும் விதமாக, கார்ட்டூனிஸ்ட் வர்மா என்பவர், முகம்மது நபிகள் கார்ட்டூனை, 48 மணி நேரத்தில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார். இது முஸ்லிம்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுதொடர்பாக, இஸ்லாமிய அமைப்புகள் கண்டனங்களை தெரிவித்துள்ளன. அமைதிப் பூங்காவான தமிழகத்தில் மதக்கலவரம் ஏற்படுத்த துடிக்கும் மாரிதாஸ் மற்றும் கார்ட்டூனிஸ்ட் வர்மாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

பேஸ்புக்கில் முஸ்லிம் அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்காவிலும், பிரான்சிலும் முகம்மது நபி பற்றி தவறான திரைப்படம், கார்ட்டூன் வெளியிட்டதற்கே தமிழகத்தில் எவ்வளவு போராட்டங்கள் நிகழ்ந்தன என்பது நமக்கு நினைவிருக்கும். தமிழகத்திலேயே அப்படியொரு கார்ட்டூன் வெளியானால், மக்களை இயக்கங்களால் கட்டுப்படுத்தி வைக்க முடியாது.
அ.தி.மு.க அரசு உடனடியாக கார்ட்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்ய வேண்டும். இல்லை என்றால், அமைதிப் பூங்காவான தமிழகத்தில் அசம்பாவிதங்கள் நிகழுவதற்கான வாய்ப்பை, தமிழக அரசே ஏற்படுத்திக்கொடுத்ததாக அமைந்துவிடும்.” என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
குளம்பிய குட்டையில் மீன் பிடிப்பதுதானே சங்க பரிவாரங்களின் வாடிக்கை, இவர்களின் பாச்சா தமிழகத்தில் பலிக்காது
நாடு இருக்கிற நிலைமையில மத சண்டை தேவையா… மாரிதாஸ் புடிச்சு உள்ள போடுங்க சார்
அவன் காசு இல்லாமல் பஞ்சத்தில் சுத்திட்டு இருக்கான் இவனுங்க மத சண்டை போட வந்திருக்கான். மாரிதாஸ் வகையறாக்கள் பப்ளிசிட்டிக்காக தான் இப்படி பேசுற
This is very bad
முகம்மது நபிகள் பற்றிய கார்ட்டூன் வெளியிட்டால் அதனால் வரும் பிரச்சனை களுக்கு கார்ட்டூனை வெளியிடுபவர்தானே பொறுப்பேற்க முடியும்?
எந்த வகையில் அதை மற்றவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுகிறார்கள் என்று புரியவில்லை. இதில் இருக்கும் நியாயம் என்ன?
சத்தியம் என்னவென்றும் புரியவில்லை.
இவர்கள் எந்தவிதத்தில் தங்கள் மத நம்பிக்கையை புரிந்து கொண்டார்கள் என்று நன்றாகப் புரிகிறது. இதையிட்டு நடைபெறும் பிரச்சினையினால் வரும் பலனை கேவலம்,
பொருளாதார அரசியல் நலனை தாம் அனுபவிக்கவும். அப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டு தன்னைச் சார்ந்த எவருக்குக்கேனும் எதேனும் நடந்தாலும் இந்த கழிசடைகளுக்கு அது ஒரு பொருட்டல்ல என்பதை இவர்கள் உடன் இருப்பவர்கள் விளங்கிக் கொண்டு இவர்களிடமிருந்து விலகி நிற்க வேண்டும்.
உண்மையும் நேர்மையும், சத்தியமும் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற நினைப்பு உண்மையில் இருக்குமானால், அதை செயலில் களத்தில் நேர்மையாக சந்திக்க வேண்டும். சம்பந்தமே இல்லாமல் நபிகளின் கார்ட்டூன் இதில் வெளியிடும் தேவை எங்கே உள்ளது.
[…] […]