பாலஸ்தீன் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு வடகொரியா கடும் கண்டனம்
இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக வடகொரிய கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
இதுகுறித்து வடகொரிய அதிகாரப்பூர்வ ஊடகமான ரோடாங் சின்முன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது
“பாலஸ்தீனுக்கு எதிரான இஸ்ரேலின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளே இந்த பிரச்சினைக்கு காரணம். சுதந்திரமான பாலஸ்தீன் நாட்டை அமைத்தால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். இஸ்ரேல் தாக்குதலால், 1500 க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால், பல்வேறு உலக நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து உள்ளனர்.
இந்த போரை நிறுத்திக்கொள்தோடு, அப்பாவி பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் நிலைபாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். ஏற்கனவே, சிரியாவில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில், ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு சிரியாவுக்கு உள்ளேயும், வெளியிலும் உள்ள தீயசக்திகளே காரணம். இது சிரியாவின் அதிபர் பஷர் அல் அசாத்தின் ஆட்சியை அகற்றுவதற்காக நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்”
இவ்வாறு வடகொரிய சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த அறிக்கையை முன்னிட்டு, தென்கொரியாவில் உள்நாட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.