ஆண் இப்படித்தான் இருக்கணும் –  ஜேக்கப் டோனோவன் தொடர் 3

வியூகம் சார்ந்த நற்பண்புகள் (The Tactical Virtues)

‘விர்’ (Vir) என்பது ‘ஆண்’ என்பதைக் குறிக்கும் லத்தீன் வார்த்தை. விர்ச்யூ (Virtue – நற்பண்பு) என்ற வார்த்தை, ‘விர்துஸ்’ (Virtus) என்ற லத்தீன் சொல்லில் இருந்து வந்தது. ஆரம்பகால ரோமானியர்களுக்கு ‘விர்துஸ்’ என்றால் ஆண்மை என்று பொருள். ஆண்மை என்றால் அவர்களுக்குப் போர்க்கள வீரம். ரோமின் எதிரிகளைத் தாக்கும் போதோ அல்லது தற்காக்கும் போதோ—பலம், துணிச்சல் மற்றும் தனது பழங்குடி சமூகத்திற்கான விசுவாசத்தைக் காட்டுவதே இந்த ‘விர்துஸ்’ என்ற ஆண்மையின் அடையாளமாக இருந்தது.

ரோமானியர்கள் அதிக வெற்றிகளைப் பெற்று, அவர்களின் நாகரிகம் விரிவடைந்த போது, எல்லா ஆண்களுமே வேட்டையாடவோ அல்லது போரிடவோ தேவையில்லை என்ற நிலை உருவானது. சண்டைகள் அனைத்தும் எல்லைக் கோட்டிலும், ரோமானிய நாகரிகத்தின் எல்லைப் பகுதியிலும் மட்டுமே நடந்தன. நாகரிகத்தின் வளர்ச்சி காரணமாக அந்த எல்லைக்கோடும் தூரத்திற்கு நகர்ந்தது. இதனால் அந்தப் பாதுகாப்பு வளையத்திற்குள் ஆழமாக வாழ்ந்த ஆண்களுக்கு, ஆண்மை என்பது வெறும் அடையாளமாக (Metaphorical) மாறியது. வேறு வேலைகளைச் செய்த ஆண்கள், தங்களின் ஆண்மையை மறைமுகமாகவே நிரூபிக்க வேண்டியிருந்தது. அவர்கள் சமூக ரீதியான துணிச்சலைக் காட்டுவது, தங்களின் ஆசைகளைக் கட்டுப்படுத்துவது மற்றும் ஒழுக்கத்துடன் நடந்து கொள்வது போன்றவற்றின் மூலம் தங்களை ஆண்கள் என்று காட்டிக் கொண்டனர். இதனால் ‘விர்துஸ்’ என்ற வார்த்தையின் அர்த்தமும், ரோமானியர்களின் ஆண்மைப் பற்றிய பார்வையும் மாறியது. அது வெறும் உயிர் பிழைப்பதற்கான குணங்கள் என்பதைத் தாண்டி, குடிமை மற்றும் ஒழுக்க விழுமியங்களை உள்ளடக்கியதாக விரிவடைந்தது.

நாகரிகங்கள் வளர வளர ஆண்மைக்கான வரையறைகளும் மற்ற நற்பண்புகளைச் சேர்த்து விரிவடைகின்றன. இருப்பினும், இந்த மற்ற நற்பண்புகள் போர்க்கள குணங்களை விட ஆண்களுக்கு என்று பிரத்தியேகமானவையாக இருப்பதில்லை. அவை கலாச்சாரத்திற்கு கலாச்சாரம் பெரிதும் மாறுபடுகின்றன. “நாகரிகமான” நற்பண்பு என்பது ஒரு நல்ல மனிதராக, ஒரு நல்ல குடிமகனாக, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் நல்ல உறுப்பினராக இருப்பது பற்றியது மட்டுமே. ஆனால், ஆண்மைக்கான நற்பண்புகள் என்பது நேரடியாக ஆண்மையோடு தொடர்புடையதாக இருக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள ஆண்கள் எதை அசல் ஆண்மையாக அங்கீகரிக்கிறார்கள் தெரியுமா? அந்தப் போர்க்களக் குணங்களைத்தான்! இதனால்தான் உலகக் காவியங்களும் அதிரடித் திரைப்படங்களும் (Action movies) எல்லா மொழி வாசகர்களுக்கும் எளிதில் பிடித்துப் போகின்றன. ஏனெனில், அவை ஆண்களின் அடிமனதில் இருக்கும் ஒரு அடிப்படை ஆசையைத் தூண்டுகின்றன—அதாவது போராடி ஜெயிக்க வேண்டும், எதற்காவது சண்டையிட வேண்டும், உயிர் பிழைக்கப் போராட வேண்டும் மற்றும் பிற ஆண்களுக்கு முன்னால் தன் தகுதியை நிரூபிக்க வேண்டும் என்ற ஆசைதான் அது!

ஒரு ஆணாக இருப்பதோடு தொடர்புடைய இந்த நற்பண்புகள், ஒரு கடினமான வாழ்க்கை தத்துவத்தை (Rugged philosophy of living) நமக்கு உணர்த்துகின்றன. இது கடுமையான மற்றும் ஆபத்தான காலங்களில் தப்பிப் பிழைப்பதற்கான ஒரு சிறந்த வியூகம். சுருக்கமாகச் சொன்னால், “ஆண்களின் வழி” (The Way of Men) என்பது ஒரு வியூகம் சார்ந்த தார்மீகக் கோட்பாடு!

உயிர் பிழைப்பதற்காக நீங்கள் போராடிக் கொண்டிருக்கும் போது, உங்களைச் சுற்றிப் பல ஆபத்துகள் சூழ்ந்திருக்கும் போது உங்களுடன் சேர்ந்து போரிடும் ஆண்களிடம் இருந்து உங்களுக்கு என்ன தேவைப்படும்?‘மாற்றார்களை’ (Them) விரட்டியடிக்க ‘நமக்குள்’ (Us) நமக்கு என்ன குணங்கள் தேவை? உணவு உண்பது என்பதே ஆபத்துகளை ஒன்றாக எதிர்கொள்வதுதான் என்றால், உங்களோடு யாரைக் கூட்டிக்கொண்டு செல்ல நீங்கள் விரும்புவீர்கள்? வேட்டையாடுவதிலும் போரிடுவதிலும் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், உங்களிடமும் உங்களைச் சுற்றியுள்ள ஆண்களிடமும் நீங்கள் எந்த நற்பண்புகளை வளர்க்க வேண்டும்? உங்களது உயிரும், நீங்கள் நேசிக்கும் மனிதர்களின் உயிரும் உங்களை நம்பி இருக்கும் போது, உங்களைச் சுற்றியுள்ள ஆண்கள் தங்களின் முழுப் பலத்தோடு இருக்க வேண்டும் என்றுதானே நீங்கள் ஆசைப்படுவீர்கள். நவீன தொழில்நுட்பங்களின் உதவி இல்லாமல் வாழ்வதற்கு, இரும்பு போன்ற உறுதியான உடலும் (Strong backs) கடுமையான உழைப்பும் தேவை. பலமான பிற ஆண்களைத் தடுத்து நிறுத்த உங்களுக்குப் பக்கபலமாகப் பலமான ஆண்கள் கண்டிப்பாகத் தேவை!

உங்களது பட்டாளத்தில் இருக்கும் ஆண்கள் பொறுப்பற்ற முரடர்களாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்கள். ஆனால், ஆபத்தான கட்டத்தில் அவர்கள் துணிச்சலானவர்களாக (Courageous) இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள். குழுவிற்கு அவர்களின் உதவி தேவைப்படும் போது, போர்க்களத்தை விட்டு ஓடிப் போகும் ஒரு ஆண் உங்கள் அனைவரின் உயிரையுமே ஆபத்தில் தள்ளிவிடுவான். உங்களுக்குக் காரியத்தை கச்சிதமாக முடிக்கத் தெரிந்த, திறமையான (Competent) ஆண்கள் தான் தேவை.

முட்டாள்களாலும், எல்லாவற்றையும் சொதப்புபவர்களாலும் சூழப்பட்டிருக்க யார் தான் விரும்புவார்கள்? வேட்டையாடுவதிலும் போரிடுவதிலும் ஈடுபடும் ஆண்கள், உங்களது குழு பயன்படுத்தும் அந்தத் தற்காப்புத் திறன்களில் தங்களின் மேலாதிக்கத்தை (Mastery) நிரூபித்தே தீர வேண்டும். இதோடு, கொஞ்சம் புதிய சிந்தனையும் சமயோசித புத்தியும் இருந்தால் இன்னும் கூடுதல் பலம் சேர்க்கும். , உங்களது ஆண்கள் இந்த பட்டாளத்திற்காக முழுமையாக தங்களை அர்ப்பணிக்க (Commit) வேண்டும். உங்களுக்குப் பக்கத்தில் நிற்கும் ஆண் ‘நம்ம ஆள்’ (Us) தானா, இல்லை ‘எதிர் தரப்பா’ (Them) என்பதை நீங்கள் உறுதி செய்தாக வேண்டும்.

நெருக்கடி காலங்களில் உங்களால் அவர்களைக் கண்ணை மூடிக்கொண்டு நம்ப முடிய வேண்டும். உங்களது முதுகைக் காக்கும் தோழர்கள் உங்களுக்குத் தேவை. மற்ற ஆண்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாத மனிதர்களை நம்பவோ, சார்ந்திருக்கவோ முடியாது. நீங்கள் புத்திசாலியாக இருந்தால், உங்களது ஆண்கள் இந்த அணிக்கு விசுவாசமாக இருப்பதை நிரூபிக்கச் சொல்வீர்கள். பட்டாளத்திற்குள் தங்களின் நற்பெயர் (Reputation) கெட்டுவிடக் கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல், பிற பட்டாளங்களுக்கு முன்னால் உங்களது கேங்கின் கௌரவத்தைக் காப்பாற்ற அவர்கள் துடிக்க வேண்டும்.பலம், வீரம், தற்காப்புத் திறன் மற்றும் வர்க்கப் பாசம் (Strength, Courage, Mastery, and Honor)மிகவும் மோசமான ஒரு சூழ்நிலையில், ஒருவரையொருவர் நம்பி வாழ வேண்டிய ஆண்களின் நடைமுறை நற்பண்புகள் இவைதான். பலம், வீரம், தற்காப்புத் திறன் மற்றும் வர்க்கப் பாசம் ஆகியவை மிகவும் எளிமையான, அவசியமான செயல்பாட்டுக் குணங்கள். தங்களின் உடன் பிறவா சகோதரர்கள் நல்லவர்களாக இருந்தாலும் சரி, அல்லது கொள்கையற்ற முரடர்களாக இருந்தாலும் சரி—முதலில் அவர்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்ட ஆண்களின் நற்பண்புகள் இவை. இந்த வியூகம் சார்ந்த குணங்கள் எப்போதுமே வெற்றியை நோக்கியே வழிகாட்டுகின்றன. இவை ஒழுக்க விதிகளுக்கு அப்பாற்பட்டவை (Amoral), ஆனால் ஒழுக்கக்கேடானவை (Immoral) அல்ல. இவற்றின் ஒழுக்கம் என்பது மிகவும் ஆதிகாலத்து உறைவிடம் கொண்டது, அது ஒரு குறிப்பிட்ட மூடிய வட்டத்திற்குள் மட்டுமே வாழக்கூடியது.(அடுத்த பக்கத்தின் தொடர்ச்சி…)பொதுவான உலகளாவிய சரி அல்லது தவறு எது என்ற தத்துவக் கேள்விகளைப் பற்றி இந்த வியூக நற்பண்புகள் கவலைப்படுவதில்லை. எதெல்லாம் வெற்றியைத் தருகிறதோ அதுவே சரி; எதெல்லாம் தோல்வியைத் தருகிறதோ அதுவே தவறு. ஏனெனில், இங்கே தோல்வி என்பது மரணம்! உங்களோடு இருக்கும் அனைத்தின் முடிவு!பலம், வீரம், தற்காப்புத் திறன் மற்றும் வர்க்கப் பாசம் ஆகியவையே அந்த எல்லைக் கோட்டைக் காக்கும் நற்பண்புகள்; நம்மை உயிரோடு வைத்திருக்கும் குணங்கள். ஆண்கள் தங்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்துக் கொள்ள இவை தேவைப்படுகின்றன. அதே நேரத்தில் தங்களுக்குத் தேவையானதை நோக்கிப் பாய்ந்து பறிப்பதற்கும் (Go after what they want) அவர்கள் இந்தக் குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவை தற்காப்பவனுக்கும் (Defender) தாக்குபவனுக்கும் (Attacker) பொதுவானவை. பல கடவுள்கள் இந்த நற்பண்புகளுக்குச் சொந்தம் கொண்டாடலாம்; ஆனால் பலம், வீரம், தற்காப்புத் திறன் மற்றும் வர்க்கப் பாசம் ஆகியவை எந்த ஒரு தனி கடவுளுக்கும் சொந்தமானவை அல்ல. ஆண்கள் எதற்காகப் போரிட்டாலும் சரி, அவர்கள் ஜெயிக்க வேண்டும் என்றால் ஒருவரிடமிருந்து ஒருவர் இந்த நான்கு குணங்களைத்தான் கண்டிப்பாக எதிர்பார்த்தாக வேண்டும்.உலகெங்கிலும் உள்ள ஆண்களின் தலைசிறந்த (Alpha) நற்பண்புகள் இவைதான். இவை ஆண்களின் மிக அடிப்படையான குணங்கள்; ஏனெனில் இவை இல்லாமல், அதற்கு மேல் இருக்கும் எந்தவொரு ‘உயர்ந்த’ நற்பண்புகளையும் உங்களால் சிந்திக்கக் கூட முடியாது! தத்துவம் பேசுவதற்குக் கூட நீங்கள் முதலில் உயிரோடு இருக்க வேண்டும் அல்லவா? இந்த நற்பண்புகளோடு நீங்கள் மற்ற குணங்களைச் சேர்த்துக் கொள்ளலாம்; அவற்றை வழிநடத்தப் புதிய விதிகளையும் ஒழுக்கக் கோட்பாடுகளையும் உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால், இந்தச் சமன்பாட்டிலிருந்து (Equation) இந்த நான்கு குணங்களை நீங்கள் முழுமையாக நீக்கிவிட்டால்… நீங்கள் வெறும் ஆண்களுக்கே உரிய பிரத்தியேக குணங்களை மட்டும் இழக்கவில்லை; மாறாக, ஒரு நாகரிகத்தையே உருவாக்கக் காரணமான அடிப்படை நற்பண்புகளையே நீங்கள் கைவிடுகிறீர்கள்!பலமான, துணிச்சலான, திறமையான மற்றும் விசுவாசமான ஆண்கள் எப்போதும் மதிக்கப்படுவார்கள். அவர்கள் ‘நமது’ (Us) அணியின் மிக மதிப்புமிக்க உறுப்பினர்களாகக் கௌரவிக்கப்படுவார்கள்.

அதிமட்டமான பலவீனமும் பயமும் கொண்ட ஆண்களை அவசரக் காலத்தில் கண்டிப்பாக நம்ப முடியாது. ஏதேனும் ஒரு முக்கியமான விஷயத்தில் திறமையற்றவர்களாக இருக்கும் ஆண்கள்—அவர்கள் விசுவாசமும், வர்க்கப் பாசமும் கொண்டவர்களாக இருந்து, வேட்டையாடுவதிலும் போரிடுவதிலும் உதவ நினைத்தால்—தங்களின் அந்தப் பலவீனத்தை ஈடுகட்ட (Compensate) ஏதேனும் ஒரு வழியைக் கண்டுபிடித்தாக வேண்டும். பழங்குடி சமூகத்திற்குள் தங்களால் முடிந்த வேறு வேலைகளையாவது அவர்கள் செய்தாக வேண்டும். ஆனால், விசுவாசத்தில் சந்தேகம் கொண்ட ஒருவன், மற்ற ஆண்கள் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்றோ அல்லது தன் சமூகத்தை உலகம் எப்படிப் பார்க்கிறது என்றோ கவலைப்படாமல் இருந்தால், வேட்டையாடும் மற்றும் போரிடும் பட்டாளம் அவனை ஒருபோதும் நம்பாது. இந்த காரணங்களால், ஆண்களின் முதன்மையான கடமைகளைச் செய்யத் தகுதியற்ற ஆண்கள் வேட்டையாடும் மற்றும் போரிடும் குழுவிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்; அவர்கள் பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் மற்றும் முதியவர்களோடு சேர்ந்து வேலை செய்ய அனுப்பப்படுவார்கள்.ஆண்களுக்கு என்று வெவ்வேறு உந்துதல்களும், தனித்திறமைகளும், குணாதிசயங்களும் இருக்கின்றன. பெரும்பாலான ஆண்களால் அந்தப் போர்க்களப் பொறுப்பிற்கு ஏற்பத் தங்களை மாற்றிக் கொள்ள முடியும். எல்லைக் கோட்டின் விளிம்பில் நின்று அவர்களால் வாழ முடியும். ஆனால், சில ஆண்களால் அதைச் செய்ய முடிவதில்லை. அவர்கள் ஆண்மை குறைந்தவர்களாகக் கருதப்படுவார்கள்; ஒரு சாதாரண மனிதனாகவே பார்க்கப்படுவார்கள். இதனால் சில ஆண்களின் உணர்வுகள் காயப்படலாம். அது நியாயமற்றதுதான். ஆனால், நெருக்கடி காலத்தில் நியாயம் என்பது ஆண்கள் அனுபவிக்க முடியாத ஒரு சொகுசு!பட்டாளத்தால் தாங்கள் புறக்கணிக்கப்படக் கூடாது என்று நினைக்கும் ஆண்கள், மற்ற ஆண்களின் மதிப்பைச் சம்பாதிக்கக் கடுமையாக உழைப்பார்கள்; தங்களுக்குள் போட்டியிடுவார்கள். இயற்கையிலேயே அதிகப் பலமும், வீரமும், திறமையும் கொண்ட ஆண்கள் அந்தக் குழுவிற்குள் உயர்ந்த அந்தஸ்தை அடைய ஒருவரோடு ஒருவர் போட்டியிடுவார்கள். குழுவிற்குள் ஒரு உயர்ந்த நிலையை அடைவதன் மூலம் கூடுதல் நன்மைகள் கிடைக்கும் போது—அதிகாரக் கட்டுப்பாடு, கூடுதல் வாழ்வாதாரங்கள், அல்லது மற்றவர்களின் மரியாதை என எதுவாக இருந்தாலும்—ஆண்கள் அந்த உயர்ந்த இடத்தைப் பிடிக்கத் தங்களுக்குள் போட்டியிட்டே தீருவார்கள். இருப்பினும், மனிதர்கள் கூட்டாக வேட்டையாடுபவர்கள் என்பதால், இந்த ‘பார்ட்டி-கேங்’ (Party-gang) கோட்பாடு தனிமனித நிலை வரைக்கும் அப்படியே பொருந்தும்.(அடுத்த பக்கத்தின் தொடர்ச்சி…)ஆண்களின் குழுக்கள் தங்களுக்குள் போட்டியிட்டுக் கொண்டாலும், கூட்டு முயற்சியால் அதிக லாபம் கிடைக்கும் என்று நம்பும் போது அவை ஒன்றாகக் கைகோர்க்கும். அதேபோல, வெளியே இருந்து பெரிய அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லாத போது, ஒரு பட்டாளத்திற்குள் இருக்கும் தனிமனிதர்கள் தங்களுக்குள் போட்டியிட்டுக் கொள்வார்கள். ஆனால் குழுவின் நன்மை என்று வரும்போது, தங்களின் கருத்து வேறுபாடுகளைக் கடந்து ஒன்றாக நிற்பார்கள். ஆண்கள் சண்டையிட மட்டுமோ அல்லது ஒத்துழைக்க மட்டுமோ படைக்கப்படவில்லை; அவர்கள் சண்டையிடவும் மற்றும் ஒத்துழைக்கவும் சேர்த்தே வடிவமைக்கப்பட்டுள்ளனர்!இந்த மோதல்களின் தன்மையைப் புரிந்து கொள்வதும், எந்தச் சூழ்நிலைக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதும்—’ஆண்களின் வழி’ மற்றும் அந்த நான்கு வியூக நற்பண்புகளைப் புரிந்து கொள்ள மிக அவசியம். ஆண்கள் தங்களது குழுவிற்குள் நடக்கும் போட்டியிலிருந்து, குழுக்களுக்கு இடையே நடக்கும் போட்டிக்கு அல்லது ஒரு வெளி அச்சுறுத்தலுக்கு எதிரான சண்டைக்குத் தங்களின் வியூகங்களைச் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.உங்கள் பட்டாளத்தில் உள்ள மற்ற ஆண்களை விட நீங்கள் பலசாலியாக இருப்பது நல்லதுதான்; ஆனால், அதைவிட உங்களது பட்டாளம் மற்ற பட்டாளங்களை விடப் பலமாக இருப்பது மிகவும் முக்கியம்! ஆண்கள் தங்களின் தோழர்களுக்குச் சவால் விடுப்பார்கள்; ஒருவருடைய வீரத்தை இன்னொருவர் சோதித்துப் பார்ப்பார்கள். பல வழிகளில், இந்தக் குழுவிற்குள் நடக்கும் சவால்கள்தான் பிற குழுக்களுடன் மோதுவதற்குக் களத்தில் ஆண்களைத் தயார்படுத்துகின்றன. மற்றவர்கள் தங்களை எளிதாகக் கையாள முடியாது என்பதை ஆண்கள் தங்களின் தோழர்களுக்கு நிரூபிக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதேபோலத் தங்களின் சொந்த நலன்களைப் பாதுகாக்கப் பிற குழுக்களுக்குப் பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதில்தான் ஒரு குழுவின் உயிர்வாழ்வே அடங்கியிருக்கிறது. ஆண்கள் தங்களின் புதிய திறமைகளைக் காட்டவும், தங்களின் தோழர்களை விடச் சிறந்தவர்களாகத் தங்களை நிரூபிக்கவும் விரும்புவார்கள். ஆனால், அந்தத் திறமைகளில் மேலாதிக்கம் (Mastery) பெறுவதுதான் இயற்கை மற்றும் பிற ஆண்களுடன் நடக்கும் போர்களில் வெற்றியைத் தீர்மானிக்கும். ஆண்கள் விளையாடும் விளையாட்டுகள் கூட, ஒரு தப்பிப்பிழைப்பதற்கான போராட்டத்தில் தேவைப்படும் வியூகச் சிந்தனையையும், உடல்திறனையும் தான் அதிகம் கோருகின்றன. ஒரு ஆணின் நற்பெயர் (Reputation), அவனது குழுவில் உள்ளவர்கள் அவனிடம் வம்பு வைத்துக் கொள்ளாமல் இருக்க உதவும்; அதேபோல ஒரு குழுவின் நற்பெயர், எதிரிகள் அவர்களோடு பகைத்துக் கொள்ளும் முன் பலமுறை யோசிக்க வைக்கும்!

சமூகவியலாளர்களும், தெருக் கும்பல்களைப் (Street gangs) பற்றி ஆராயும் நிபுணர்களும் பொதுவாக என்ன எழுதுகிறார்கள் தெரியுமா? ஆண்கள் தங்களின் நற்பெயரைப் பற்றி அளவுக்கு அதிகமாகக் கவலைப்படுவதையும், யாராவது தங்களை அவமதித்தால் (“disses”) அதற்குப் பழிவாங்கத் துடிப்பதையும் ஒருவித குழப்பமான, அகம்பாவம் பிடித்த குணமாகவே அவர்கள் பார்க்கிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால், மனித வரலாற்றின் பெரும்பகுதியில் ஆண்கள் இப்படித்தான் வாழ்ந்திருக்கிறார்கள். காவல்துறையின் பாதுகாப்பு நமக்குக் கிடைக்காது என்ற சூழ்நிலையில் வாழும் எவருக்கும், இதற்குப் பின்னால் இருக்கும் வியூகம் சார்ந்த காரணங்கள் மிக எளிதாகப் புரிந்துவிடும். ஆபத்து என்று வரும்போது உங்களைக் காப்பாற்ற யாரும் வரப்போவதில்லை என்றால், நீங்கள் முரட்டுத்தனமாக இருந்தாக வேண்டும்; அல்லது பார்ப்பதற்காவது முரடனைப் போலக் காட்சியளிக்க வேண்டும்! அதுமட்டுமல்லாமல், அவசரக் காலத்தில் உங்களது முதுகைக் காக்க (Get your back) எப்போதும் சில முரட்டு ஆண்கள் உங்களுடன் தயாராக இருக்க வேண்டும் என்றுதான் நீங்கள் ஆசைப்படுவீர்கள்.இவ்வளவு எளிமையான, வெளிப்படையான ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்வதில் மக்களுக்கு எப்படி இவ்வளவு குழப்பம் வருகிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம்… நம்முடைய ஆதிகால முன்னோர்கள் மட்டும் இவர்களைச் சந்தித்திருந்தால், இந்நேரம் இவர்களைக் கொன்றுவிட்டு இவர்களிடம் உள்ள பொருட்கள் அனைத்தையும் பறித்துக் கொண்டு போயிருப்பார்கள்!

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x