கபசுர குடிநீருக்கு ஜனாதிபதி மாளிகையிலும் வரவேற்பு!

ஜனாதிபதி மாளிகை மற்றும் தமிழர்கள் அதிகம் வசிக்கும், டில்லியின் முக்கிய பகுதிகளில், தமிழகத்தின் சித்த மருத்துவ கஷாயமான, கபசுர குடிநீர் பிரபலமாகி வருகிறது.

ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர், அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள், தோட்டக்காரர்கள், சமையல்காரர்கள் என, ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இங்குள்ள ‘ஆயுஷ் வெல்னஸ்’ கிளினிக்கில் இருக்கும் 10 பேர் கொண்ட சித்த மருத்துவப் பிரிவு, கபசுர குடிநீரை, அந்த மாளிகை முழுதும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து, இக்குழுவின் தலைவரான சித்த மருத்துவர் இளவரசன் கூறியதாவது, “தினமும், 4 முதல், 5 லிட்டர் கபசுர குடிநீர் தயாரிக்கப்படுகிறது. இதை, ஜனாதிபதி மாளிகையில் உள்ள அனைவரும், காலையில் பருகிய பிறகே, பணிகளுக்குச் செல்கின்றனர். உரிய அனுமதி பெற்று, டில்லியின் முக்கிய இடங்களிலும், தினந்தோறும் கபசுர குடிநீரை வினியோகம் செய்து வருகிறோம். இதற்கு, அடித்தட்டு மக்களிடையே பெரிய வரவேற்பு உள்ளது” என்று தெரிவித்தார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x