கொரோனா ஃபைட்டர்ஸ் – மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைய விளையாட்டு!

கொரோனாவுக்கு எதிராக போராடுவது எப்படி என்பது குறித்து இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தொடர்ந்து வலியுறுத்தும் வகையில் ‘கொரோனா ஃபைட்டர்ஸ்’ என்ற இணைய விளையாட்டை மத்திய சுகாதார அமைச்சர் வெளியிட்டார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 62,282 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் விகிதம் 74% ஆக உயர்ந்துள்ளது. 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 50 சதவீதக்கு அதிகமானோர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரசுக்கு எதிராக போராடுவது குறித்து இளைஞர்கள், குழந்தைகளுக்கு வலியுறுத்தும் வகையில் எளிய இணைய விளையாட்டை மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் வடிவமைத்துள்ளனர். கொரோனா பைட்டர் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த விளையாட்டை thecoronafighters.in என்ற இணைய முகவரிக்கு சென்று ஆடலாம். எதிர்படும் கொரோனா வைரஸை கை சுத்தம், ஆரோக்கியமான உணவுகளை சேகரித்து விரட்டி அடிக்கலாம் என்ற வகையில் விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வெளியிட்டார்.
Twitter (http://twitter.com/MoHFW_INDIA/status/1296771388699627520)