முத்திரைத் தாள் கட்டணங்களை குறைக்க மாநிலங்களுக்கு வலியுறுத்தல்

சொத்து விற்பனைகளை ஊக்குவிக்க முத்திரைத் தாள் கட்டணங்களை மாநில அரசு குறைக்க வேண்டும் என மத்திய வீட்டு வசதி அமைச்சக செயலாளர் கூறியுள்ளார்.

தொழில்துறை ஒன்று ஏற்பாடு செய்த வெபினார் ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், முத்திரைத் தாள் கட்டணத்தை குறைக்க அனைத்து மாநிலங்களுக்கும் நாங்கள் அறிவுரை வழங்கியிருந்தோம். அதனை மஹா., அரசு செயல்படுத்தியுள்ளது. மற்ற மாநிலங்களிடமும் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றார்.

தொழில்துறையினர் கோரிக்கைகள், பரிந்துரைகளை கேட்டவர் குடியிருப்புகளின் விலை குறைப்புக்காக வருமான வரி சட்டத்தில் மாற்றம் தேவை போன்றவற்றை அரசு ஆராயும் என்றார்.

மேலும் தற்போது ரியல் எஸ்டேட் தொழிலை எளிதாக்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கட்டுமான அனுமதி ஆன்லைனில் வழங்கப்படுகின்றன. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கான மலிவு விலை வாடகை வீட்டு வளாகங்கள் திட்டம், வாடகை வீடுகளுக்கான சந்தையை உருவாக்கும் என்றார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x