கரீபியன் பிரீமியர் லீக் டி-20: பொல்லார்டின் சிக்ஸர் மழையால் டிரினிடேட் நைட் ரைடர்ஸ் திரில் வெற்றி..

கரீபியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது வெஸ்ட் இண்டிஸில் பிரமாண்டாமாக நடைபெற்று வருகின்றது. இந்த லீக் தொடரில் ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. லீக் தொடர் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பார்வையாளர்கள் இன்றி நடைபெற்று வருகின்றது. இந்த தொடரின் 17வது லீக் போட்டி டிரினிடேட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெல்லார்ட் தலைமையிலான டிரினிடேட் நைட் ரைடர்ஸ் அணியும் ஹோல்டர் தலைமையிலான பார்பாடாஸ் ட்ரைடென்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டிரினிடேட் நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து விளையாடிய பார்பாடாஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஷாய் ஹோப் மற்றும் சார்லஸ் இருவரும் களம் இறங்கினர்.

ஷாய் ஹோப் 4 ரன்னில் பெவுலியன் திரும்ப சார்லஸ் மற்றும் மையர்ஸ் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். சார்லஸ் 47 ரன்னிலும் மையர்ஸ் 43 ரன்னிலும் அவுட் ஆக பின்னர் களம் இறங்கிய கேப்டன் ஹோல்டர் 3 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். கோரி ஆன்டர்சன் 6 ரன்னில் நடையை கட்ட நர்ஸ் மற்றும் ரஷித் கான் கடைசி ஓவர்களில் அடித்த ஆடினர். 20 ஓவர்கள் முடிவில் பார்பாடாஸ் அணி 148-7 ரன்கள் சேர்த்தது. பந்து வீச்சில் ஹசைன், ராஷா, சார்லஸ் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.

அதன் பின்னர் களம் இறங்கிய டிரினிடேட் அணியில் தொடக்க விரர்கள் சிம்மன்ஸ் மற்றும் வெப்ஸ்டர் இருவரும் களம் இறங்க வெப்ஸ்டர் 5 ரன்னிலும் அடுத்து களம் இறங்கிய கோலின் முன்ரோ 0 ரன்னிலும் அவுட் ஆகினர். அதன் பின்னர் வந்த ப்ராவோ, ஹசைன் போன்ற வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த நிலையில் அதன் பின்னர் களம் இறங்கிய கேப்டன் பெல்லார்ட் சிக்ஸர் மழை பொழிந்தார். அதிரடியாக விளையாடிய பெல்லார்ட் 28 பந்தில் 72 ரன்கள் குவித்தார். டிரினிடேட் அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x