அதிக கல்வியறிவு பெற்ற மாநிலங்கள் பட்டியல்: தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்?

தேசிய அளவில் கல்வியறிவு பெற்ற மாநிலங்கள் பட்டியலில், கேரளா மாநிலம் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்திற்கு 8வது இடம் கிடைத்துள்ளது.

கடந்த 2017 ஜூலை முதல் 2018 ஜூன் வரையிலான தேசிய மாதிரி ஆய்வை, தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 8,097 கிராமங்களில் உள்ள, 64 ஆயிரத்து 519 வீடுகள், 6,188 மண்டலங்களில் உள்ள 49 ஆயிரத்து 238 வீடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

அதில், நாட்டில் அதிக கல்வியறிவு பெற்ற மாநிலமாக, கேரளா 96.2 சதவீதத்துடன் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. டெல்லி 88.7 சதவீதத்துடன் 2வது இடமும், உத்தரகண்ட் 87.6 சதவீதத்துடன் 3வது இடமும் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களை முறையே, ஹிமாச்சல பிரதேசம், அசாம், மஹாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் பிடித்துள்ளன.

இந்தப் பட்டியலில், தமிழகத்துக்கு 8வது இடம் கிடைத்துள்ளது. தமிழகத்தில், கிராமப்புறத்தில் 77.5 சதவீத மக்களும், நகரில் 89 மக்களும் கல்வியறிவு பெற்று, ஒட்டுமொத்தமாக 82.9 சதவீத பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். 87.9 சதவீத ஆண்கள், 77.9 சதவீத பெண்கள் தமிழகத்தில் கல்வியறிவு பெற்றுள்ளனர். 66.4 சதவீத கல்வியறிவு பெற்றவர்களுடன், ஆந்திர மாநிலம் கடைசி இடம் பிடித்துள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x