பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், டெல்லியில் இன்று, மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. வரும் நாட்களில், முக்கியமான மசோதாக்களை மத்திய பாரதிய ஜனதா அரசு தாக்கல் செய்ய இருக்கிறது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது. முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து, இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x