ஐந்து மாதங்களாக வெளியிடப்படாமல் இருந்த பிபா கால்பந்து தரவரிசை: பெல்ஜியம் தொடர்ந்து முதலிடம்- இந்தியா?

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கால்பந்து போட்டிகள் நடைபெறவில்லை. தற்போது கிளப் அணிகளுக்கு இடையில் போட்டிகள் நடைபெற்றது.

இதனால் நாடுகள் அளவிலான தரவரிசை கடந்த ஐந்து மாதங்களாக வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று தரவரிசை வெளியிடப்பட்டது. இதில் பெல்ஜியம் தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறது. பிரான்ஸ் 2-வது இடத்தையும், பிரேசில் 3-வது இடத்தையும், இங்கிலாந்து 4-வது இடத்தையும், போர்ச்சுக்கல் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது. ஐரோப்பா நேசன்ஸ் தொடரில் சிறப்பாக விளையாடி போர்ச்சுக்கல் இரண்டு இடம் முன்னேறியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனி 14-வது இடத்திலும், சுவிட்சர்லாந்து 15-வது இடத்திலும் உள்ளது. டென்மார்க் 16-வது இடத்திலும் உள்ளது. உலககோப்பையை நடத்த இருக்கும் கத்தார் 55-வது இடத்தில் உள்ளது. இந்தியா 109-வது இடத்தில் உள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x