5 லட்சம் பேர் டிஸ்லைக்!! பாஜவின் யூடியூப் சேனலில் அதிகம் வெறுக்கப்பட்ட நிகழ்ச்சி மன் கி பாத்..

பாஜவின் யூடியூப் சேனலில் பார்வையாளர்களால் அதிகம் வெறுக்கப்பட்ட நிகழ்ச்சியாக பிரதமர் மோடியின் ‘மன் கி பாத்’ மோசமான இடத்தை பெற்றுள்ளது. ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் பிரதமர் மோடி அகில இந்திய வானொலியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். ஆகஸ்ட் மாதத்தின் கடைசி ஞாயிறான நேற்று முன்தினம் ‘மன்கி பாத்’ நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் விளையாட்டு பொம்மைகள் பற்றியும், நாட்டு நாய்களின் திறன்கள் குறித்தும் பேசினார்.

பிரதமர் பேசி முடித்த சிறிது நேரத்திலேயே டிவிட்டரில் பயனாளர்கள் பலரும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். கொரோனா பாதிப்புக்கு மத்தியில் நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைப்பதைப் பற்றி பேசாத பிரதமர் சம்மந்தமின்றி நாட்டு நாய்களை வளர்ப்பது பற்றியும், விளையாட்டு பொம்மைகளையும் பற்றி பேசுகிறாரே என கேள்வி எழுப்பினர்.

இதே போல, பாஜவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இந்த வீடியோ பதிவேற்றம் செய்ததும் சில மணி நேரத்திலேயே எதிர்மறையான கருத்துக்கள் குவிந்தன. இந்த வீடியோ பதிவிட்ட சில மணி நேரத்திலேயே 18 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அதில் 74 ஆயிரம் பேர் மட்டுமே லைக் செய்துள்ளனர். 5 லட்சம் பேர் டிஸ்லைக் செய்து தாங்கள் விரும்பவில்லை என்பதை பதிவிட்டுள்ளனர். அதே போல, 88 ஆயிரம் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x