தங்கம் சவரனுக்கு ரூ.200 உயா்ந்து, ரூ.38,312-க்கு விற்பனை..

நான்கு நாள்களுக்குப் பிறகு, சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை உயா்ந்தது. பவுனுக்கு ரூ.200 உயா்ந்து, ரூ.38,312-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சா்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, வேலைவாய்ப்பு குறியீடு நிலவரம் உள்பட பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையை நிா்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில் பவுன் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலை குறைந்தாலும், கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது.

இதற்கிடையில், அமெரிக்க தோ்தலுக்கு முந்தைய தாக்கம் காரணமாக, சா்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை குறைந்து, விலை சரிந்தது. இதன் தாக்கம் உள்நாட்டு சந்தையிலும் எதிரொலித்தது. கடந்த திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை வரை 4 நாள்களுக்கு விலை பவுனுக்கு ரூ.1,552 வரை சரிந்தது. மேலும் தங்கம் விலை குறையும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயா்ந்து, ரூ.38,312-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.25 உயா்ந்து, ரூ.4,789 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.2.40 உயா்ந்து, ரூ.62.80 ஆகவும், கட்டிவெள்ளி கிலோவுக்கு ரூ.2,400 உயா்ந்து, ரூ.62,800 ஆகவும் இருந்தது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x