இரண்டு நாட்களில் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!!

தங்கத்தின் விலை இன்றைய காலை நிலவரப்படி சவரனுக்கு 312 ரூபாய் குறைந்துள்ளது தங்க பிரியர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பங்குச்சந்தை கடந்த வாரத்தின் இறுதியில் படு வீழ்ச்சி அடைந்தது. இதனால் தங்கத்தின் விலை படு வீழ்ச்சி அடைந்து 37000 தொட்டது. அதன் தொடர்ச்சியாக பங்குச்சந்தை இந்த வாரத்தின் முதல் நாளான நேற்று சற்று ஏற்றத்துடன் முடிந்தது. ஆனால் இன்று காலையில் இருந்து தங்கத்தின் விலை படு வீழ்ச்சியை அடைந்துள்ளது. இது வெகுஜன மக்களிடையே சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலின் தாக்கம் உலக சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துவதே இதற்குக் காரணமாக இருக்கம் என வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் வட்டிக்கு வட்டி மீதான நீதிமன்றத்தின் தீர்ப்பு போன்றவை இந்த விலை குறைவுக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ‌.1544 குறைந்துள்ளது. எனவே ஆபரணத்தங்கத்தின் மதிப்பு நேற்று ஒரு கிராம் விலை ரூ.4709 க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஆபரணத்தங்கத்தின் விலையானது கிராமிற்கு ரூ.39 விலை குறைந்துள்ளது, எனவே ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூபாய் 4670க்கு விற்பனையாகிறது.

தூய தங்கத்தின் விலையும் கடந்த வாரத்தின் முதலே ஏற்ற இறக்கத்துடனே உள்ளது. நேற்று ஒரு கிராம் தூய தங்கம் ரூ.5084 க்கு விற்பனையானது. இன்று ஒரு கிராம் தூய தங்கம் ரூ.39 விலை குறைந்து, கிராமானது ரூ‌.5045 க்கு விற்பனையாகிறது.

ஒருபுறம் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடையும்போது, மறுபுறம் வெள்ளியின் விலையானது உயரத்தொடங்கியுள்ளது. ஆனால் நேற்றைய விலையில் கிராமிற்கு 69 பைசா குறைந்து, கிராம் 66.10 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 66100 க்கு விற்பனையாகிறது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x