ஐபில் 2020:25-வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி….

டாஸ் வென்று முதலில் பேட் செய்த பெங்களூரு அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. கேப்டன் கோலியின் அதிரடியால், கடைசி 5 ஓவர்களின் அந்த அணிக்கு 74 ரன்கள் கிடைத்தன. கடந்த சில போட்டிகளில் சரியாக ரன் குவிக்காத கோலி, சென்னைக்கு எதிராக அதிரடி காட்டி 52 பந்துகளில் 90 ரன்கள் குவித்து அசத்தினார்.

பின்னர் 170 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு, துவக்கம் சரியாக அமையவில்லை. டூ-ப்ளெஸிஸ் 10 பந்துகளில் 8 ரன்களுக்கும், வாட்சன் 18 பந்துகளில் 14 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

மூன்றாவது வீரராக களமிறங்கிய ராயுடு 42 ரன்களும், ஜெகதீசன் 33 ரன்களும் சேர்த்து ஆறுதல் அளித்தனர். அடுத்து வந்த கேப்டன் தோனி உட்பட யாரும் நிலைத்து நிற்காததால், சென்னை அணி 132 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியை தழுவியது.

சென்னை அணியின் தொடர் தோல்வி மற்றும் கேப்டன் தோனியின் மோசமான ஆட்டம் போன்ற காரணங்களால், சென்னை அணி ரசிகர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.