தகர ஷீட்டில் பேருந்து நிறுத்தம் அமைக்க ரூ.45 லட்சம் செலவு… மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அதிமுக எம்.எல்.ஏ.!!

தகர ஷீட்டில் பேருந்து நிறுத்தம் அமைக்க ரூ.45 லட்சம் செலவு என திருப்பூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ குணசேகரன் தற்போது விளம்பரப்படுத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. தகர ஷீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிறுத்தத்தின் மதிப்பு 45 லட்சம் ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“போதிய வசதியின்றி தகர ஷீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிறுத்தத்திற்கு 45 லட்சம் ரூபாய் செலவாகி இருக்கிறதா?” பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி அமைக்க ரூ.7.70 லட்சம் செலவானதாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவின. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது பயணிகள் பேருந்து நிறுத்தம் அமைக்க 45 லட்சம் ரூபாய் செலவு மதிப்பீடு அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x