MSC பட்டதாரிகளை அழைக்கும் CMTI நிறுவனம்!!!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு எம்.எஸ்சி, பி.எஸ்சி உள்ளிட்ட துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.20 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : திட்ட உதவியாளர்

மொத்த காலிப் பணியிடம் : 02

கல்வித் தகுதி : M.Sc Chemistry, Diploma in Mechanical Engineering, Diploma in Metallurgy, B.Sc Chemistry, B.Sc Physics

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.20,000

விண்ணப்பிக்கும் முறை :மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.cmti-india.net என்ற இணையதளம் மூலம் 31.10.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.cmti-india.net லிங்க்கை கிளிக் செய்யவும்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x