வெங்காயத்தோடு போட்டி போட்டு உயரும் உருளைக் கிழங்கு விலை!! திணறும் இல்லத்தரசிகள்!!

சமீப காலமாக வெங்காய விலை அதிகரித்து வரும் அதிர்ச்சியிலிருந்தே மக்கள் மீளாத நிலையில், உருளைக்கிழங்கு விலையும் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடமாநிலங்களில் அதீத மழை காரணமாக வெங்காய சாகுபடி குறைந்துள்ளதால் தமிழகத்திற்கு வெங்காய வரத்தும் குறைந்துள்ளது. இதனால் வெங்காய விலை அதிகரித்து கிலோ ரூ.100க்கும் அதிகமாக விற்பனையாகிறது. இந்நிலையில் தமிழக அரசு எகிப்து, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் வெங்காயத்தை இறக்குமதி செய்து குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இந்நிலையில் தற்போது உருளைக்கிழங்கு விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள உருளைக்கிழங்கு மண்டிகளுக்கு உருளைக்கிழங்கி வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. 45 கிலோ உருளைக்கிழங்கு மூட்டை விலை வழக்கமான விலையை விட ரூ.1000 விலை உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிலோ உருளை ரூ.100 விற்று வரும் நிலையில் மேலும் விலை அதிகரிக்கலாம் என கூறப்படுவதால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x