“விவசாயியாக காட்டி கொள்ளும் தமிழக முதல்வர், விவசாய மசோதாக்களுக்கு ஆதரவு அளித்தது ஏன்?” காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் கேள்வி!!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விவசாய மசோதாக்களை ஏன் ஆதரித்தார் என அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் கேள்வி எழுப்பியுள்ளார்.
2021 சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்காக நெல்லை வந்த, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதிலேயே பாஜக அரசு முனைப்பாக உள்ளது. பாஜவின் தலையாட்டும் பொம்மையாக தமிழக அரசு உள்ளது.
விவசாயிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, தன்னை விவசாயிகளின் தலைவராக காட்டி கொள்ளும் தமிழக முதல்வர், விவசாய மசோதாகளுக்கு ஏன் ஆதரவு அளித்தார். மேலும், வரும் சட்டமன்ற தேர்தலிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடரும்” என்று அவர் தெரிவித்தார்.