புதிய உச்சத்தைத் தொட்டது தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.424 அதிகரித்து, ரூ.37,472 எனும் புதிய உச்சத்தை தொட்டது.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. இது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை உயா்ந்து வந்தது.

இந்நிலையில், சென்னையில், புதன்கிழமை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.53 அதிகரித்து, ரூ.4,684-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.60 அதிகரித்து, ரூ.54.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,600 அதிகரித்து ரூ.54,700 ஆகவும் இருந்தது.

இன்றைய விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் …………………..4,684

1 பவுன் தங்கம் ………………… 37,472

1 கிராம் வெள்ளி ……………… 54.70

1 கிலோ வெள்ளி ……………..54,700

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x