மறுபடியும் முதல இருந்தா…! மீண்டும் வேதங்களை தாக்கி பேசும் திருமாவளவன்!!

சமீபத்தில் மனுஸ்மிருதி குறித்து திருமாவளவன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது மற்ற வேதங்கள் குறித்தான அவரது பதிவு மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக வீடியோ கான்பரன்ஸ் ஒன்றில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் மனுஸ்மிருதி பெண்களை இழிவாக சித்தரிப்பதாக பேசியது சமூக வளைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பெண்களை அவதூறாக பேசிய திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

https://twitter.com/thirumaofficial/status/1323461418293755905?s=20

இந்த பரபரப்பு தற்போது மெல்ல அடங்கி வரும் நிலையில் திருமாவளவன் மீண்டும் பதிவிட்டுள்ள அவரது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் “மனுநூல் மட்டுமின்றி, வேதங்கள், உபநிடதங்கள் போன்றவையும் நம்மை இழிவு படுத்துபவையே. அவற்றையும் அம்பலப்படுத்தக் கோருகிறார் மூங்கிலடிகளார். தமிழ்நாட்டில் தமிழில்_மட்டுமே_வழிபாடு செய்ய சனாதனிகள் உடன்படுவரோ என கேள்வி எழுப்புகிறார். மோ(ச)டிக் கும்பல் பதில் சொல்லுமா?’ என்று கேள்வி எழுப்பி ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார். இதனால் மீண்டும் பரபரப்பு எழுந்துள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x