“ஆண்டி” என்று அழைத்தச் சிறுமியை அடித்து துன்புறுத்திய பெண்கள்!!

உத்தரப்பிரதேசத்தில் சிறுமி, பெண் ஒருவரை ‘ஆண்டி’ என்று அழைத்ததால், பெண்கள் இணைந்து அந்த சிறுமியை அடித்துத் துன்புறுத்தும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின், பாபுகஞ்ச் சந்தையில் இச்சம்பவம் நடந்தேறியுள்ளது. ஊடகங்களில் வெளியிடப்பட்ட தகவலின் படி, பாபுகஞ்ச் சந்தையில் நூற்றுக்கும் அதிகமானோர் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, குழுவாக வந்த பெண்களில் ஒருவரை அதே கடையில் பொருட்கள் வாங்க வந்த சிறுமிகளில் ஒருவர் “ஆண்டி” என்று அழைத்துள்ளார். எதற்காக அவர் அப்படி அழைத்தார் என்று தெரியவில்லை.

சிறுமி ஆண்டி என்று அழைத்த பெண் உடனே அந்த சிறுமியை கீழே பிடித்து தள்ளியும், முடியை பிடித்து இழுத்து அடித்தும் துன்புறுத்தியுள்ளார். சிறுமி அடிவாங்குவதை அவருடன் வந்த மற்றொரு சிறுமி தடுக்க முயன்றுள்ளார். இவர்களின் சண்டை பெரிதாக அருகே இருந்த பெண் போலீஸ் ஒருவர் இவர்களை சமாதானம் செய்கிறார். ஆனாலும் அவர்கள் அதை கேட்கவில்லை. ஒருவர் மீது மற்றொருவர் குற்றஞ்சாட்டி வாக்குவாதம் செய்துள்ளனர்.

இந்த வீடியோ திங்கள் கிழமை பதிவு செய்யப்பட்டடுள்ளது. இதற்குப் பலரும், தாக்கும் அந்த பெண்களுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x