மும்பையில் பட்டாசுகள் வெடிக்கத் தடை ; கரோனா அச்சுறுத்தல் காரணம்..

கரோனா தொற்றுப் பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பட்டாசுகளை வெடிக்கத் தடை விதிக்கப்படுவதாக மும்பை கூடுதல் ஆணையர் சுரேசா கக்கானி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நவம்பர் மாதம் 12ஆம் தேதி முதல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எனினும் கரோனா தொற்று பரவலின் மத்தியில் பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று மற்றும் குளிர்காலத்தை கருத்தில் கொண்டு பட்டாசு வெடிப்பு மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு வெடிப்பின் மூலம் காற்றில் உள்ள துகள்களின் செறிவை அதிகரிப்பதால் அது குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களின் உடல்நிலையை பாதிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

பட்டாசு வெடிப்பதால் வெளியாகும் புகை மற்றும் காற்று மாசுபாடுகள் கரோனா நோயாளிகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் அபாயம் இருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மேற்குவங்கம், ராஜஸ்தான், ஒடிசா, சிக்கிம் மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x