தவறான தகவல் பதிவிட்டு வீடியோ வெளியிட்ட அசாம் மந்திரி ஹிமந்தா?? பதிவை மறைத்த பேஸ்புக் நிறுவனம்!!

தவறான தகவலுடன் வீடியோ வெளியிட்ட அசாம் மந்திரி ஹிமந்தாவின் பதிவை, பேஸ்புக் நிறுவனம் மறைத்துள்ளது. இந்த விவகாரம் அசாம் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அசாமில் ஆளும் பா.ஜனதா அரசில் முக்கியமான மந்திரியாக இருப்பவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா. இவர் எதிர்க்கட்சியான அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியினர் தங்கள் தலைவர் மவுலான பத்ருத்தின் அஜ்மலை வரவேற்கும் நிகழ்வு ஒன்றில், ‘பாகிஸ்தான் வாழ்க’ என கோஷமிடுவதாக கூறி ஒரு வீடியோவை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருந்தார்.
ஆனால் தங்கள் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ‘அயிஸ்கான் வாழ்க’ என கோஷமிட்டதாக அந்த கட்சியினர் தெரிவித்தனர். இது தொடர்பாக உண்மை கண்டறியும் நிறுவனங்கள் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் மந்திரி ஹிமந்தா வெளியிட்ட தகவல் தவறானது என கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து மந்திரி ஹிமந்தாவின் பதிவை, பேஸ்புக் நிறுவனம் அவரது பக்கத்தில் இருந்து மறைத்துள்ளது. இந்த விவகாரம் அசாம் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.