மோசடி வழக்கில் சென்னை போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் கணேசன் கைது!!

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த புகாரின் பேரில் சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. 1.62 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக சென்னை போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் கணேசன் வீட்டில் ஏற்கனவே போலீசார் சோதனை நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில் விசாரணையில் முறைகேட்டிற்கு முகாந்திரம் இருப்பதாக தெரியவந்ததை அடுத்து சென்னை போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் கணேசன் கைது செய்யப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.