மு.க.அழகிரி தனிக்கட்சி தொடங்குவது குறித்து வெளியான புதிய தகவல்!!

“தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசானை நடத்த உள்ளதாக வெளியான தகவல் தவறானது” என்று மு.க.அழகிரி உதவியாளர் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி தற்போது அரசியலிருந்து விலகி உள்ளார். அடுத்த வருடம் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மு.க. அழகிரி தனிக்கட்சி தொடங்க உள்ளதாகாவும், அது தொடர்பாக வரும் 20-ம் தேதி ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

மேலும் அவரது தந்தை கருணாநிதி பெயரில் அரசியல் கட்சி தொடங்க உள்ளார் என்றும் கூறப்பட்டு வந்தது. இதனிடையே வரும் 21-ம் தேதி தமிழகம் வர உள்ள அமித்ஷாவை அழகிரி சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார் என்றும் பலதரப்பட்ட தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் இவை அனைத்தையும் தவறான தகவல் என்று மு.க.அழகிரி தரப்பிலிருந்து தற்போது கூறப்பட்டுள்ளது. வரும் 20 ஆம் தேதி மு.க.அழகிரி தனிக் கட்சித் தொடங்குவது தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி ஆலோசிக்க இருப்பதாகவும் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்று தனியார் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் இதுப் போன்ற தகவல் பரவி வருகிறது. இது தவறான தகவல் என்று முக அழகிரி அவர்கள் தனது உதவியாளர் மூலம் தெளிவுப்படுத்தி உள்ளார்.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x