உலகில் அதிக விபத்து நடக்கும் டாப்-10 நாடுகளின் பட்டியல் : இந்தியாவின் இடம் தெரியுமா?

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சின் தரவுகளின்படி, 2018 ஆம் ஆண்டில் இந்தியா கிட்டத்தட்ட 1.51 லட்சம் இறப்புகளைக் கண்டது, இது உலகிலேயே அதிகமாகும். தற்போது சர்வதேச சாலை கூட்டமைப்பு ஜெனீவாவால் வழங்கப்பட்ட உலகில் அதிகம் விபத்து நடக்கும் டாப்-10 நாடுகளின் தரவுகளை வெளியிட்டுள்ளது.

2018-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி,, அமெரிக்கா உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துக்களை சந்தித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதன்படி, 2.21 மில்லியன் விபத்துக்கள் நிகழ்ந்தன, இதன் விளைவாக 37,461 பேர் பலியாகினர் மற்றும் 3.14 மில்லியன் பேர் காயமடைந்தனர். உலகின் மிகப்பெரிய சாலை நெட்வொர்க்கைக் கொண்ட அமெரிக்கா, வாகனங்களின் இரண்டாவது பெரிய நுகர்வோர் ஆகும்.

ஜப்பான் இரண்டாவது இடத்தில் உள்ளது, அதன்படி 2018 இல் நடந்த 499,232 சாலை விபத்துக்களில் 4,698 பேர் இறந்தனர் மற்றும் 614,155 பேர் காயமடைந்தனர். ஜப்பான் உலகின் மூன்றாவது பெரிய வாகன சந்தையாகவும், ஆறாவது பெரிய சாலை வசதிகளை கொண்டுள்ளது.

இந்தியாவில் சாலை விபத்துக்கள் அடிப்படையில் உலகில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அதன்படி விபத்துகள் எண்ணிக்கை 480,652 ஆகவும் அதில் 150,785 பேர் உயிரிழந்தனர், இது வேறு எந்த நாட்டையும் விட அதிகம். அதே ஆண்டில் 494,624 பேர் காயமடைந்தனர். இந்தியாவின் சாலை நெட்வொர்க் உலகின் இரண்டாவது பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல ஐரோப்பாவின் மிகப்பெரிய வாகன சந்தையான கொண்டுள்ள ஜெர்மனி 4வது இடத்திலும், தைவான் 5 வது இடத்திலும் ஈரான் 6வது இடத்திலும் தென்கொரியா 7 வது இடத்திலும் சீனாவில் 8 வது இடத்திலும் துருக்கி 9வது இடத்திலும் இத்தாலி 10வது இடத்திலும் உள்ளன.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x