வண்ண வாக்காளர் அட்டை எளிதில் பெறுவது எப்படி?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வாக்காளர் அட்டை சாதாரண படிவங்களாக வழங்கப்பட்டு பின்னர் சற்று மாறுபட்டு அட்டைகளில் வழங்கப்பட்டது.. தற்போது புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு வண்ண வாக்காளர் அட்டை வழங்கப்படுகிறது. 

உங்களிடம் உள்ள பழைய வாக்களர் அட்டைக்கு மாற்றாக இந்த புதிய வாக்களர் அட்டையை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறுவது எப்படி எனப் பார்க்கலாம்.

முதலில் www.nvsp.in என்ற இணையதள முகவரியில் லாகின் செய்யவேண்டும். நீங்கள் புதிய வாக்காளர் என்றால் Registration Of New Voter என்ற லிங்கை கிளிக் செய்யவும் அல்லது Correction of Entries என்ற லிங்கை கிளிக் செய்யவும். 

இதில் மொழியை தேர்வு செய்து பெயர், வயது, முகவரி போன்ற தேவையான அனைத்து தகவலையும் உள்ளிட வேண்டும். மேலும் குறிப்பிட்டுள்ள உங்களது முகவரிச் சான்று, ஆதார் எண், பிறப்புச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

உள்ளீடு செய்த தகவல்களை மீண்டும் சரி பார்த்த பின்பு சமர்ப்பிப்பு(Submit) பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். உடனே ஈமெயிலில் உங்களுக்கு ஒரு லிங்க் அனுப்பப்படும். அதன் மூலம் விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

இதையடுத்து விண்ணப்பித்து 30 நாட்களுக்குள் உங்களின் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை உங்களுக்கு கிடைத்துவிடும்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x