25 ஆயிரம் பேர் பாதுகாப்புடன் அதிபராக பதவியேற்கிறார் பிடன்..

அமெரிக்காவின் புதிய அதிபராக, ஜோ பிடன், 25 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்புடன் பதவியேற்கிறார். 

தேர்தல் முடிவுகளை அதிபர் டிரம்ப் ஏற்காததால், ஆளும் கட்சி, எதிர்க்கட்சியினர் இடையே மோதல் நிலவுகிறது. இதனால் ஜோ பிடன் பதவியேற்பில் டிரம்ப் ஆதரவாளர்கள் ஏதேனும் வன்முறையில் ஈடுபடலாம் என்று உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. 

இதையடுத்து, பதவியேற்பு விழா நடக்கும் வாஷிங்டன் நகரில், 25 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

டிரம்ப் ஆதரவு மனநிலை கொண்ட போலீசார், படைவீரர்கள் இருக்கிறார்களா என்பது பற்றியும் உளவுப்பிரிவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், சந்தேகத்தின் பேரில், இரண்டு வீரர்களை, காவல் பணியில் இருந்து விலக்கிக்கொள்ள பாதுகாப்பு படை உத்தரவிட்டுள்ளது. இந்த இருவரும், டிரம்ப் ஆதரவு வலதுசாரி குழுக்களுடன் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x