9, 11-ம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு எப்போது? – பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
9, 11-ம் வகுப்புகளுக்கு இப்போது பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை என்று தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், “10-ம் வகுப்புக்கு 20 வகுப்பறைகளும், 12-ம் வகுப்பிற்கு 20 வகுப்பறைகளும் என தனித்தனியாக பிரித்து வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பொதுத்தேர்வு பணிகளை உரிய விதிகளை பின்பற்றி மேற்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.
இத்தகைய சூழலில் 9, 11-ம் வகுப்புகளுக்கு இப்போது வகுப்புகளை தொடங்க வாய்ப்பு இல்லை . மேலும் மாணவர்கள் நலன் முக்கியம் என்ற அவர், கூடுதலாக மாணவர்களை அனுமதித்தால் பள்ளிகளில் இட நெருக்கடி ஏற்பட்டு நோய் தொற்றிற்கு வழிவகுக்கும்.” என்றார்.