உலகப் பணக்காரர் லிஸ்டில், முன்னேறிய அம்பானி!
உலக பணக்காரர்கள் பட்டியலில், ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, 6வது இடத்துக்கு முன்னேறினார்.
முகேஷ் அம்பானி கடந்த வாரம், 68.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன், உலக பணக்காரர்கள் பட்டியலில் 8வது இடத்தை பிடித்திருந்தார். இந்நிலையில், தற்போது 6வது இடம் பிடித்துள்ளார். கடந்த 22 நாட்களில் மட்டும், அவரது சொத்து மதிபபு 7900 கோடி டாலர் அதிகரித்துள்ளது. தற்போது அவரது நிகர சொத்து மதிப்பு 5.44 லட்சம் கோடி ரூபாய் ஆக உள்ளது.
உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில், அமேசான் கம்பெனி முதலாளி ஜெப் பெசாஷ்(184 பில்லியன் டாலர்) பிடித்துள்ளார். அடுத்த இடத்தில் தடுப்பூசி மற்றும் சாப்ட்வேர் தொழில் ஈடுபட்டுள்ள பில்கேட்ஸ் (115 பில்லியன் டாலர்) உள்ளார். 3வது இடத்தில் பெர்னார்டு அர்னால்ட் (94.5 பில்லியன் டாலர்) உள்ளார்.
4வது இடம் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்குக்கும் (90.8 பில்லியன் டாலர்), 5வது இடத்தில் ஸ்டீவ் பால்மர்க்கும் (74.6 பில்லியன் டாலர்) உள்ளனர். 6வது இடத்திற்கு பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான முகேஷ் அம்பானி (72.4 பில்லியன் டாலர்) முன்னேறியுள்ளார்.