‘பிக்பாஸ்கெட்’ நிறுவனத்தின், 68 சதவீத பங்குகளை வாங்கும் ‘டாடா’

‘டாடா’ குழுமம், ஆன்லைன் மளிகை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும், ‘பிக்பாஸ்கெட்’ நிறுவனத்தின், 68 சதவீத பங்குகளை வாங்க உள்ளது.

இது குறித்து, ‘டாடா’ குழும அதிகாரி ஒருவர் கூறியதாவது :

‘டாடா’ நிறுவனம், தற்போது மின்னணு வர்த்தகத்தில் அதிக முனைப்பு காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே, ‘பிக்பாஸ்கெட்’ நிறுவனத்தின், 68 சதவீத பங்குகளை, 9,500 கோடி ரூபாய் மதிப்பில் வாங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கிட்டத்தட்ட கையெழுத்தாகிவிட்டது.

‘பிக்பாஸ்கெட்’ நிறுவனத்தில், சீனாவைச் சேர்ந்த, தொழிலதிபர் ஜாக் மா தலைமையிலான, ‘அலிபாபா’ நிறுவனமும் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மின்னணு வர்த்தகம் சூடு பிடித்திருக்கும் நிலையில், தன் தயாரிப்புகள் அனைத்தும் ஒரே, ‘செயலி’யின் மூலம் கிடைக்கும் வகையில், ‘மெகா செயலி’ ஒன்றை உருவாக்கி வருகிறது, ‘டாடா’ குழுமம். கடந்த, 2011ம் ஆண்டில் துவங்கப்பட்ட, ‘பிக்பாஸ்கெட்’ தற்போது, 25 இந்திய நகரங்களில் செயல்பட்டு வருகிறது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x