முதல்வர் வேட்பாளர் டிடிவி தினகரன் – அமமுக தீர்மானம்

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை முதலமைச்சர் வேட்பாளராக நியமித்து கட்சி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை முதலமைச்சர் அரியணையில் அமரவைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், அதிமுகவை மீட்டெடுக்கவும், கூட்டணி தொடர்பான இறுதி முடிவுகள் எடுக்க தினகரனுக்கு அதிகாரம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கூட்டத்தில், 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.