‘கறுப்பர் கூட்டத்துடன் தொடர்பா?…’ – கொதித்த தி.மு.க பொருளாளர் துரைமுருகன்..

மின் கட்டண ரீடிங்கில், முறைகேடு நடப்பதாகக் குற்றம்சாட்டி தி.மு.க-வினர் நேற்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தினர். தி.மு.க பொருளாளர் துரைமுருகன் காட்பாடியில் உள்ள தன் வீட்டுக்கு முன்பு கறுப்புக்கொடி ஏந்தி, கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தார். தலை மற்றும் முகத்தை முழுவதுமாக `கவர்’ செய்தபடி பாதுகாப்பு கவசம் அணிந்திருந்தார். சமூக இடைவெளியை விட்டு அவரின் மகனும் வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த், அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ நந்தகுமார் உட்பட நிர்வாகிகள் பலர் கண்டன கோஷம் எழுப்பினர்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன், `இந்திய வரலாற்றில் சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. ஆளுநர் நிர்வாகத்தைக் கைக்குள் வைத்திருப்பது, அபத்தம் என்பதைப் பாண்டிச்சேரி சுட்டிக்காட்டியிருக்கிறது.நீட்’ தேர்வில் நீதியை நிலை நாட்டினார்களா? இல்லை. அதைப் போலத்தான் அனைத்து உரிமைகளையும் இந்த மாநில அரசாங்கம், மத்திய சர்க்காரிடம் கொடுத்துவிட்டது. மின் கட்டணத்தில் குளறுபடி செய்ததே அந்தத் துறையின் அமைச்சர் தங்கமணிதான்.

கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளதால், தங்கமணி குழம்பிப் போய் உள்ளார். எந்தக் காலத்திலும் மத்திய அரசு நிதியை கொட்டிக் கொடுத்ததே கிடையாது. காங்கிரஸ் பீரியடாக இருந்தாலும் சரி. தி.மு.க, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆண்டபோதும் மத்திய சர்க்கார் வா… என்று கூப்பிட்டு நிதியைக் கொடுக்க மாட்டார்கள். நாமதான் எதிர்த்து வாதாடி வாங்கணும். மத்திய சர்க்கார் திராவிட கொள்கைக்கு எதிரான கருத்துடைய ஓர் அரசு.

பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியலினத்தவர்கள் என்பதெல்லாம் பா.ஜ.க-வின் சிந்தனையில் கிடையாது. அவர்களுக்கு இந்துத்துவா தவிர வேறொன்றும் கிடையாது’’ என்றார்.

இடைமறித்த சேனல் நிருபர் ஒருவர், கறுப்பர் கூட்டத்தைப் பின்னால் இருந்து இயக்குவதே தி.மு.க-தான் என்று பல்வேறு அமைப்பினர் குற்றம் சாட்டுகிறார்களே, அதற்கு உங்கள் பதில் என்ன?’’ என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு துரைமுருகன் இது மாதிரி கேள்விக்குப் பதில் சொல்ல முடியாது. கறுப்பர் கூட்டத்துக்கும் தி.மு.க-வுக்கும் சம்பந்தமில்லை. அதற்கான தேவையும் எங்களுக்கு இல்லை’’ என்றார் தடாலடியாக.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x