அதிரடி ஆட்டக்காரர் டி வில்லியர்ஸ் மீண்டும் ஆட வேண்டும்: தெ.ஆ. கேப்டன் விருப்பம்…

டி20 உலகக் கோப்பை அணியில் டி வில்லியர்ஸ் இடம்பெற வேண்டும் என தென் ஆப்பிரிக்க கேப்டன் டி காக் விருப்பம் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மே 23 அன்று, சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக டி வில்லியர்ஸ் அறிவித்தார். 34 வயது டி வில்லியர்ஸ் தன்னுடைய திடீர் ஓய்வு அறிவிப்பை சமூகவலைத்தளம் வழியாக அறிவித்தார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று, டி20 போட்டிகளில் விளையாடி வரும் டி வில்லியர்ஸை மீண்டும் தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெற வைத்து, டி20 உலகக் கோப்பையில் விளையாட வைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த வருடம் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பைப் போட்டி அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் டி வில்லியர்ஸ் இடம்பெற வேண்டும் என தென் ஆப்பிரிக்க கேப்டன் டி காக் விருப்பம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

டி வில்லியர்ஸைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவர் அணியில் இடம்பெற வேண்டும் என விரும்புகிறேன். எந்த அணியிலும் அவரை வைத்து விளையாட விரும்புவார்கள். டி20 உலகக் கோப்பைப் போட்டி எப்போது நடைபெறுகிறது என்பதைப் பார்த்து அவரிடம் இதுபற்றி விவாதிக்க வேண்டும் என்றார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x