திமுக MLA கு.க செல்வம், பதவி கிடைக்காத விரக்தியில் பிஜேபி-யில் ஐக்கியம்?

ஆயிரம் விளக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் கு.க. செல்வம். திமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருக்கும் இவர் , 1997ல் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தார்.
கு.க.செல்வம் தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவியை எதிர்பார்த்திருந்ததாக கூறப்படுகிறது. மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தியில் அவர் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கு.க.செல்வம் டெல்லியில் இன்று மாலை பாஜக தலைவர் நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.இது தி. மு. க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.