விநாயகர் சதுர்த்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!!

கறுப்பர் கூட்டத்தால் வந்த தலைவலி, திமுக கட்சியை இப்போது விடாது துரத்துகிறது. அதனால் அதன் தலைமை மட்டுமில்லாது அதன் அடுத்தக்கட்ட தலைவர்களும் கூட கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

அதன் எதிரொலியாக தான் அக்கட்சியின் ஆர்எஸ் பாரதி, திமுகவில் ஒரு கோடி இந்துக்கள் உறுப்பினர்களாக உள்ளனர் என்று கூறி இருந்தார்.  கந்தசஷ்டி விவகாரத்தில் கைதானவர்களுக்கு குண்டர் சட்டம் பாய, அது திமுகவுக்கு மேலும் அதிர்ச்சி தந்தது. அதில் கைதாகி உள்ள செந்தில்வாசன், திமுகவின் ஐடி விங்கில் முக்கிய பொறுப்பில் இருப்பதும் காவல்துறை விசாரணையில் வெளிப்பட ஸ்டாலின் தரப்புக்கு பெரும் சிக்கலாகி இருக்கிறது.

கறுப்பர் கூட்டம் பின்னணியில் திமுக உள்ளது என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாக செய்திகள் காவல்துறைய வசம் இருந்தே லீக் செய்யப்பட, அது அப்படியே ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்துக்களின் ஒட்டுமொத்த கோபம் இப்போது திமுகவின் மீது உள்ளதை புரிந்து கொண்ட மு.க.ஸ்டாலின், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கலந்து பேசி உள்ளாராம். இந்த பிரச்னைகளில் இருந்தும், திமுகவின் மீது விழுந்த இந்த முத்திரையையும் எப்படி அகற்றலாம் என்றும் பேசியுள்ளனராம்.

கடைசியில் ஒரு முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாம். இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளை பட்டியலிட்டு அதற்கு ஒவ்வொரு அணி நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவிப்பது, அதை சமூக வலைதளங்களில் அனைத்து தரப்பு மக்களிடம் எடுத்துச் செல்வது என்பது தான் அந்த திட்டம்.

அதன்படி தான் அண்மையில் திமுக விவசாய பிரிவு அணியின் சார்பில் ஆடிபெருக்கு நாளுக்கு வாழ்த்து தெரிவிப்பது போன்று போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டப்பட்டனவாம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்க, இந்த விவரம் ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று மற்ற அணிகளின் நிர்வாகிகளும் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

மற்றவர்களை செய்ய சொல்லிவிட்டு தாம் செய்யாமல் போனால் கேள்வி வருமே என்று எண்ணிய ஸ்டாலின் முதன்முறையாக விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்க முடிவு செய்து இருக்கிறாராம்.

அதற்கான போஸ்டர் அடிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு தகவல் தரப்பட்டுள்ளதாம். தாமும் அதில் இணைய வேண்டி, முதல்முறையாக விநாயகர் சதுர்த்தி வாழ்த்தை அறிக்கை வாயிலாக தெரிவிக்க ஸ்டாலின் முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x