முதல் டெஸ்டில் பாகிஸ்தானை பந்தாடிய இங்கிலாந்து…! பட்லர் – வோக்ஸ் கூட்டணி அபாரம்!!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மசூத் அபாரமாக விளையாடி 156 ரன்கள் குவித்தார். இதன் மூலம் பாகிஸ்தான் 326 ரன்கள் குவித்தது.இதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து 219 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. பாகிஸ்தான் வீரர் யாஷிர் ஷா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் 107 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய மசூத் டக்அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற பாகிஸ்தான் அணி 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி நிதானமாக ஆடியது. 2-வது இன்னங்சில் ஆரம்பத்தில் தடுமாறிய இங்கிலாந்து 117 ரன்களுக்கு 5 விக்கெட்களை பறிகொடுத்தது.ஆனால் பின்வரிசை வீரர்களான ஜோஸ் பட்லர் மற்றும் கிறிஸ் வோக்ஸ் சிறந்த பர்டனர்ஷிப் அமைத்து இங்கிலாந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். பட்லர் 75 ரன்களில் ஆட்டமிழந்தாலும், வோக்ஸ் 84 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் நின்றார்.

இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் டெஸ்டில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலையில் உள்ளது. ஆட்டநாயகன் விருதை இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் பெற்றார். இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி தொடங்க உள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x