பாஜகவில் இணைந்த பிரபல துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஸ்ரேயாசி சிங்

பிரபல துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஸ்ரேயாசி சிங் இன்று பாஜகவில் இணைந்தார்.
தில்லியில் பாஜக தலைமையகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் கட்சித் தலைவர் பூபேந்திர யாதவ் முன்னிலையில் அவர் தன்னை பாஜவில் இணைத்துக்கொண்டார். எனது தாய் மற்றும் மூத்த சகோதரியின் ஆசீர்வாதத்துடன் பாஜகவில் உறுப்பினராகி இருக்கிறேன்.
எனது தந்தையின் கனவை நிறைவேற்றவே பாஜகவில் இணைந்தேன் என்றார். ஷ்ரேயாசி சிங் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் திக்விஜய் சிங்கின் மகள் ஆவார். இவர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பல்வேறு பதங்களை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
எனவே, இவருக்கு 2018ஆம் அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. பிகார் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஸ்ரேயாசி சிங்கின் வருகை பாஜகவிற்கு மேலும் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.