டி20 உலகக்கோப்பை எப்போது? முக்கிய தகவல்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்துவது குறித்து அடுத்த ஐசிசி கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று அதன் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடத்த ஐசிசி முடிவு செய்திருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, உலகக்கோப்பை தொடரை நடத்த ஆஸ்திரேலியா மறுத்து விட்டது.

மேலும், உலகம் முழுவதும் பரவி வரும் நோய் தொற்றினால், மற்ற நாடுகளும் இந்தத் தொடரில் பங்கேற்பதில் சந்தேகமாகியுள்ளது. அதோடு, முன்னாள், இன்னாள் வீரர்கள் இந்தத் தொடரை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனவே, டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தத் தொடர் குறித்து ஐசிசி இன்னும் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

இந்த நிலையில், டி20 உலகக்கோப்பை தொடர் நடத்தப்படுமா.. இல்லை ஒத்திவைக்கப்படுமா..? என்பது குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்ய வாய்ப்பிருப்பதாக ஐசிசி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால், அடுத்த கூட்டத்திற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x