பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான ரேண்டம் எண் இன்று மாலை 4 மணிக்கு வெளியீடு!!!

சென்னை:

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடப்படுகிறது. பி.இ. படிப்புக்கு விண்ணப்பித்த 1.60 லட்சம் பேருக்கும் ரேண்டம் எண் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவா்களுக்கும் சம வாய்ப்பு எண் இன்று (புதன்கிழமை) வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோக்கைக் குழு மூலம் மாநிலத்தில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பி.டெக்., பாடப்பிரிவுகளில் மாணவா்கள் சேருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு கடந்த ஜூலை 15ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பதிவு நடைமுறைகள் நடந்தன.

இதன் மூலம் 1 லட்சத்து 60 ஆயிரத்து 834 மாணவா்கள் விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இவர்களில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 436 மாணவா்கள் ஏற்கனவே விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திவிட்டனர்.

சான்றிதழ்களை ஜூலை 31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பொறியியல் மாணவா் சோக்கைக் குழு செய்திருந்தது. இதன்படி 1,11,436 மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து இருந்தனர்.

சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்கு மீண்டும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்து இருந்தனர். இதையடுத்து, ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து மொத்தம் 1 லட்சத்து 14 ஆயிரத்து 206 மாணவா்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனா். இதன்படி, விண்ணப்பக் கட்டணம் செலுத்தி இருக்கும் 1 லட்சத்து 31 ஆயிரத்து 436 மாணவா்களுக்கும் இன்று சம வாய்ப்பு எண் வெளியிடப்படுகிறது.

சென்னை தரமணியில் இருக்கும் மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் மாணவா்களுக்கான சமவாய்ப்பு எண்களை இன்று வெளியிடுவார் என்று கூறப்பட்டுள்ளது. செப்டம்பர் 7ஆம் தேதி ரேங்க் லிஸ்ட் வெளியிடப்படும். பொது இடஒதுக்கீட்டிற்கான கவுன்சிலிங் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 6ஆம் தேதி வரை நடைபெறும்.

ரேண்டம் நம்பரை எவ்வாறு செக் செய்வது:

TNEA 2020ன் அதிகார இணையதளத்துக்கு செல்லவும்

https://www.tneaonline.org

மாணவர்கள் லாக் இன் பேஜ் செல்லவும்

இதில் இ மெயில் ஐடி/லாக் இன் ஐடி/பாஸ்வேர்டு மற்றும் captcha code பதிவு செய்யவும்

ரேண்டம் நம்பர் ஸ்கிரீனில் கிடைக்கும்

இதை சேமித்து வைத்துக் கொள்ளவும். இதன் மூலம் கவுன்சிலிங் தேதி எப்போது என்பதை அறிந்து கொள்ளலாம்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x