மிகப்பெரும் உலக சாதனை படைத்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டி!!
மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான 2020 ஐபிஎல் தொடரின் முதல் போட்டி, 20 கோடி உலக பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
செப்டம்பர் 19 ஆம் தேதி நடந்த இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியின் வெற்றி மூலம் சிஎஸ்கே கேப்டனாக 100ஆவது வெற்றியை பதிவு செய்தார் தோனி. தோனி இதுவரை சிஎஸ்கே அணிக்கு 161 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். இதில் 100 போட்டிகளில் வெற்றியையும், 60 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளார். 1 போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. மும்பை அணிக்கு எதிராக தொடர்ந்து 5 தோல்விகளுக்குப் பிறகு சென்னை அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது
Opening match of #Dream11IPL sets a new record!
As per BARC, an unprecedented 20crore people tuned in to watch the match. Highest ever opening day viewership for any sporting league in any country- no league has ever opened as big as this. @IPL @SGanguly99 @UShanx @DisneyPlusHS
— Jay Shah (@JayShah) September 22, 2020
இந்நிலையில் சிஎஸ்கே – மும்பை அணிகள் விளையாடிய ஆட்டத்தைத் தொலைக்காட்சியில் அதிகப் பார்வையாளர்கள் பார்த்துள்ளதாக பிசிசிஐயின் செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார். தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அவர், “டிரீம் 11 ஐபில் தொடரின் முதல் போட்டி புதிய சாதனையை படைத்துள்ளது. BARC-இன் அறிவிப்பின்படி, 20 கோடி மக்கள் போட்டியை பார்த்துள்ளனர். எந்தவொரு நாட்டிலும் எந்தவொரு விளையாட்டு தொடருக்கும் இதுவரை கிடைக்காத பார்வையாளர்கள் இது. எந்த லீக் தொடருக்கும் இதுவரை இப்படி ஒரு ஓபனிங் கிடைத்ததில்லை” என்று பதிவிட்டுள்ளார்.
தோனி கடைசியாக 2019 உலகக் கோப்பையின் போது நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடி இருந்தார். 437 நாட்களுக்குப் பிறகு இந்தப் போட்டி மூலம் கிரிக்கெட் களத்திற்கு திரும்பினார். இந்தியாவின் முன்னாள் கேப்டன் தோனி இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.