‘தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு செவித்திறனே இல்லை!” ஹர்சிம்ரத் கவுர் விமர்சனம்!
இப்போது இருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு செவித்திறன் இல்லை என அமைச்சர் பதிவியிலிருந்து விலகிய அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவரான ஹர்சிம்ரத் கவுர் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய அமைச்சர் பதவியிலிருந்து அகாலி தளம் கட்சியின் எம்.பி. ஹர்சிம்ரத் கவுர் கடந்த இரு வாரங்களுக்கு முன் விலகினார். வேளாண் மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். மேலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக சிரோமணி அகாலி தளம் கட்சி அறிவித்தது.
If Pain & Protests of 3 cr punjabis fail to melt the rigid stance of GoI, it's no longer the #NDA envisioned by Vajpayee ji & Badal sahab. An alliance that turns a deaf ear to its oldest ally & a blind eye to pleas of those who feed the nation is no longer in the interest of Pb. https://t.co/OqU6at00Jx
— Harsimrat Kaur Badal (@HarsimratBadal_) September 26, 2020
இந்நிலையில் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகிய அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவரான ஹர்சிம்ரத் கவுர், தனது டிவிட்டர் பதிவில், “மத்திய அரசின் பிடிவாதமான நிலைப்பாட்டை 3 கோடி பஞ்சாப் மக்களின் வலியும், போராட்டமும் கலந்த உறுதியான நிலைப்பாட்டை கவனிக்க தவறினால், அது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் பாதல் சாஹேப் சேர்ந்து உருவாக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி எனும் நீண்டகால அழிந்து விடும். இப்போது இருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு செவித்திறன் இல்லை, தேசத்துக்கு நீண்டகாலமாக உணவு அளித்துவரும் பஞ்சாப் மக்களின் நலனைப் பார்ப்பதில் பார்வை இழந்துவிட்டது.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.