பூர்வகுடியினருக்கான பட்டியலில் சேர்ந்த படுகர் இனம்!! ஐ.நா., அறிவிப்பு!!

நீலகிரி படுக மக்களை பூர்வகுடியினருக்கான பட்டியலில் சேர்த்து, ஐ.நா., மலைகளுக்கான கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின், மலைகளுக்கான கூட்டமைப்பு, உலக பூர்வகுடியினருக்கான பட்டியல் தயாரிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. ‘நீலகிரி ஆவண மைய காப்பகம்’ சார்பில், நீலகிரி படுக சமுதாயம், உலக பூர்வகுடியினருக்கான பட்டியலில் இடம்பெற வேண்டி, அனைத்து ஆவணங்களுடன், விண்ணப்பம் அளிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் மலைகளுக்கான கூட்டமைப்பு, விண்ணப்பத்தை ஏற்று, அக்., 12ல், படுகர் சமுதாயத்தை உலக பூர்வ குடியினர் பட்டியலில் இடம்பெற செய்தது. அதற்கான அறிவிப்பு சான்றிதழை, நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் வேணுகோபால் மற்றும் நிர்வாகிகள், கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் இருந்து படுகர் இன தலைவர் அய்யாரு பெற்றார்.
படுகர் இன தலைவர் அய்யாரு கூறுகையில்,”படுகர் மக்கள் நீலகிரியின் மண்ணின் மைந்தர்கள் என்று ஐக்கிய நாடுகளின் மலைகளுக்கான கூட்டமைப்பு அறிவித்து, பூர்வகுடியினருக்கான பட்டியலில் சேர்த்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பாரம்பரிய கலாச்சாரத்தை, மலை மாவட்ட மக்கள் காக்க வேண்டும்.” என்றார்.