ஊராட்சி மன்றத்தின் அலட்சிய போக்கால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியான இளைஞர்!!
![](https://thambattam.com/storage/2020/11/image-113077-1585223796.jpg)
அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி மன்றத்தின் அலட்சிய போக்கால் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் உள்ள சிறுகுடிநீர் தொட்டி இயங்கி வருகிறது, இதற்கு கடந்த ஒரு வருடமாக மின் இணைப்பு பெறாமல் கள்ளத்தனமாக தொரட்டி குச்சி மூலம் மின்சாரம் பெறப்பட்டு, சுவிட்ச் பாக்ஸ் அருகிலுள்ள கம்பி வேலியில் வைத்துள்ளனர்.
![](https://thambattam.com/storage/2020/11/f40c1d7f2504efa2de7532a8e51831fd0168549215a2a43ebdef64a538648ea7-e1606456881317-300x207.jpg)
கம்பி வேலியில் வயரில் இருந்த இணைப்பு உரசியதால் கம்பி வேலி முழுவதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. அப்போது, அந்த வழியாக சென்ற ராமகிருஷ்ணன் மகன் பாலாஜி (19) என்பவர் சாலை சகதியாக இருந்ததால் சேற்றில் வழுக்கி விழாமல் இருக்க அருகிலிருந்த கம்பி வேலியின் மேல் கை வைத்துள்ளார். உடனடியாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
இதுகுறித்து செந்துறை காவல்துறை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செந்துறை ஊராட்சி மன்றத்தின் அலட்சிய போக்கே இளைஞர் பலியாக காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.